Saturday, September 26, 2020

ஆயிரத்தியொரு நிலா

ஆயிரத்தியொரு  நிலா 

என்னுயிரிலே உன்னை எழுத 
பொன்மேனி தாராயோ



பொன் விளையும் பூமி
உன்மேனி விதைத்திடவே 
தந்ததின்று மேனி.. 

நீ அழைத்த  ஆயிரம் நிலவுகள் 
உன்னை இணைத்துக்கொண்டது  
ஆயிரத்தியொரு நிலவாய்..

'ஆயிரம் நிலவே வா' என்னுமுந்தன்  முதல் பாடல், புகழின் உச்சிக்கு கொண்டு சென்றது.

தேந்தமிழ்ப்பாடலை
திருவேங்கடத்தான் நீ பாட  
மூவேந்தர் வழிவந்த மன்னவனும் 
காவிரி தந்த பேரெழிலும் ஆட 
திராவிடமே  மலர்ந்ததங்கே!   

பாடும் நிலா என மக்களால் அன்புடன் அறியப்பட்ட  நீங்கள் இன்று தெய்வமானீர்கள்.

வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வான்உறையும்
தெய்வத்துள் வைக்கப் படும்.

                                                                            - திருக்குறள் 50


நிறை வாழ்வு உங்களுடையது. குறையொன்றுமில்லை தெய்வமாய் மிளிர்ந்து நிற்க!

 




No comments:

Post a Comment

கல்லிலே கலைவண்ணம்

கல்லிலே கலைவண்ணம்     எனக்கு தீப ஆராதனை.  இவ்வளவு நேரம் என் மேனியெல்லாம் அபிஷேகம். பால், தேன், பஞ்சாமிர்தம் என வெவ்வேறு உணவு, வாசனை திரவியங்...