ரகசியம் பரமரகசியம்
இது நமக்குள்
இருப்பது அவசியம்
'மண்ணில் உயிர்ப்பெடுத்த மறுகணமே அன்னை மடி அறியும் பரம ரகசியம் யார் சொல்லி தந்தார் கன்றினுக்கு? மனிதனாய் பிறந்ததனால், பிறவியின் திசையறியாமல் தத்தளிக்கும் எனக்கு அருள் செய்வாய்' - என்று வேண்டி நின்ற எனக்கு, கீழ்க்கண்ட அத்தியாயம் படிக்க உத்திரவு கிடைத்தது.
'முந்தைய, ஜன்மங்களிலுள்ள நல்வினைகளால் நாம் இவ்வுடம்பைப் பெற்று இருக்கிறோம். பக்தியையும், விடுதலையையும் இவ்வுதவியை கொண்டு பெறுவது தகுதியுடையதாகும். எனவே, எப்போதும் நாம் சோம்பலின்றி இருக்க வேண்டும். நமது குறிக்கோளையும் நோக்கத்தையும் பெறுவதில் நாம் எப்போதும் விழிப்பாய் இருக்க வேண்டும்.'
- ஸ்ரீ சாய் சத் சரித்திரம்
இதே கேள்வி எனக்கு மட்டுமல்ல, மண்ணில் மனிதனாய் பிறந்து, தன்னுணர்வு எய்தப்பெற்ற பேரருளாளர்கள் மனதிலும் தோன்றியதில் ஆச்சர்யம் கொண்டேன்.
அன்னை எத்தனை எத்தனை அன்னையோ
அப்பன் எத்தனை எத்தனை அப்பனோ
பெண்டிர் எத்தனை எத்தனை பெண்டிரோ
பிள்ளை எத்தனை எத்தனை பிள்ளையோ
முன்னை எத்தனை எத்தனை சன்மமோ
மூடனாய் அடியேனும் அறிந்திலேன்
இன்னம் எத்தனை எத்தனை சன்மமோ
என்செய்வேன்கச்சி ஏகம்ப நாதனே.
அப்பன் எத்தனை எத்தனை அப்பனோ
பெண்டிர் எத்தனை எத்தனை பெண்டிரோ
பிள்ளை எத்தனை எத்தனை பிள்ளையோ
முன்னை எத்தனை எத்தனை சன்மமோ
மூடனாய் அடியேனும் அறிந்திலேன்
இன்னம் எத்தனை எத்தனை சன்மமோ
என்செய்வேன்கச்சி ஏகம்ப நாதனே.
- பட்டினத்தார் பாடல் 83
இதோ, திருமூலர் மனிதப்பிறவியின், பரம ரகசியத்தின் முடிச்சை அவிழ்க்கும் வழியை நமக்கு காட்டுகிறார்.
நான்பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்
வான்பற்றி நின்ற மறைப்பொருள் சொல்லிடின்
ஊன்பற்றி நின்ற உணர்வுறு மந்திரம்
தான் பற்றப்பற்றத் தலைப்படும் தானே.
- திருமந்திரம் 85
இலை மறை, காய் மறையாக மறைத்து வைக்கப்பட்டுள்ள விண்ணுலகம் செல்லும் வழி நான் அறிந்து கொண்டு, அடையும் இன்பத்தை, உங்களுக்கும் சொல்கிறேன் கேளுங்கள் மனிதர்களே!
உடலின் உணர்வுகள் விழிப்பு நிலையில் இருக்க, 'ஓம் நமக்ஷிவய' எனும் மந்திரத்தை தொடர்ந்து சொல்லி வாருங்கள். தானாகவே உங்கள் பிறப்பின் பரம ரகசியம் அறியத்தலைப்படுவீர்கள்.
"ஊன் பற்றி நின்ற உணர்வுறு மந்திரம்"
ReplyDeleteதிருவைந்தெழுத்தா என்பது உணர்வால் தான் அறிய வேண்டுமெனினும்
அப்படியே நம்பவும் செய்யலாம்
ஊனைப்பற்றி நிற்பது
ஐந்தெழுத்தா அல்லது ஐம்பத்தோரெழுத்தா
ஏனெனில்
நாவின் கீழது நல்ல எழுத்தொன்று பாவிகள் அத்தின் பயனறி வாரில்லை
ஓவியராலும் அறியவொண்னாதது தேவியும் தானும் திகழ்ந்திருந்தானே.
நாவின் கீழே எனில்
அண்ணாக்கின் உள்ளே அகண்ட ஒளிகாட்டி புண்ணாக்கி நம்மை பிழைப்பித்தவாறே
என்பதில் இருந்து ஊனின் வேவ்வேறு இடங்களை வெவ்வேறு மந்திர ஒலிகள் பற்றியிருக்க கூடுமோ என்பதே என் ஐயம்
This comment has been removed by the author.
ReplyDeleteநாவின் கீழே என்பதும்
ReplyDeleteபுண்ணாக்கி என்பதும் ஓரே கருத்தை உணர்த்துவதாக தெரிகிறது
அக்ஷரங்கள் எனப்படும் மந்திரங்களை உருவாக்கும், ஊன் பற்றி நிற்கும், எழுத்துக்கள் ஐம்பத்தி ஒன்று. அதில் ஓரெழுத்து மந்திரம் எனப்படும் 'ஓம்' எனும் பிரணவ மந்திரமும், ஐந்தெழுத்து மந்திரமான 'நமக்ஷிவய' எனும் பஞ்சாக்ஷர மந்திரமும், உடலின் உணர்வுறு மந்திரங்கள்.
Deleteபிராணாயாமத்தில், மூச்சு காற்றை உள்ளிழுக்கும்போது, 'நமக்ஷிவய' - எனும் மந்திரம் உடலுக்கு உணர்வு தரும் பிராணனாய் அமைகிறது. அதுவே. 'க்ஷிவயநம' - என்று காற்றை வெளிவிடும்போது. ஒளி உடம்பில் கலந்து இறையுடன் ஒன்றி, பரம ரகசியம் அறிய ஏதுவாகிறது.
இதனை, கீழ்க்கண்ட திருமந்திரம் வலியுறுத்தி சொல்கிறது.
படுவ திரண்டும் பலகலை வல்லார்
படுவ தோங்காரம் பஞ்சாக் கரங்கள்
படுவது சங்காரத் தாண்டவப் பத்தி
படுவது கோணம் பறந்திடும் வாறே.
- திருமந்திரம் 893
ஓம் நமக்ஷிவய எனும் மந்திரம் தியானத்தில் ஜெபிக்கும்போது, திசைகளற்று எங்கும் நிறைந்திருக்கும் சிவனருளைப்பெறலாம்.
திருப்பதி லட்டின் சுவையை பற்றி பேசுவதற்கும்
Delete7மலையை நடந்து ஏறி பலமணிநேரம் காத்திருந்து ஓரே நிமிடத்திற்கு பெருமானை தரிசித்து அந்த கூட்டத்தில் நெருக்கி வெளியே வந்து சில்லென்ற காற்றில் நெகிழ்ந்து பிரசாத லட்டின் ஒரு துளியை நாவில் கண்மூடி சுவைப்பதும் முற்றிலும் வேறு
அதுபோலத்தான்
திருவைந்தெழுத்தை பேசுவதும் உணர்வதும்...
எவ்வளவு படித்தாலும் கேட்டாலும் இறையை சிறிது நேரம் மட்டுமே உணர முடிகிறது
அந்த அனுபவமும் அவர் விரும்பும் போது தான் நடக்கிறது.
மீராவின் ஏக்கமே அவர் கீதங்கள்...
இங்கோ ஏக்கபெரூமூச்சு மட்டுமே