நிலா
அன்று வந்ததும் இதே நிலா
இன்று வந்ததும் அதே நிலா
இன்பம் தந்ததும் ஒரே நிலா
ஏங்க வைப்பதும் ஒரே நிலா
அன்று வந்ததும் இதே நிலா
இன்று வந்ததும் அதே நிலா
இன்பம் தந்ததும் ஒரே நிலா
ஏங்க வைப்பதும் ஒரே நிலா
'வெற்றி.. வெற்றி.. வெற்றி..' - வெற்றிக்கொண்டாட்டம் பறம்பு மலையெங்கும்.
வீரயுக நாயகன் வேள் பாரியை சூழ்ச்சியால் கொன்று, வென்ற மூவேந்தர்களின் படையின் முழக்கம் வானதிர்ந்தது. இருப்பினும், வீரர்களின் உள்ளத்தில் குதூகலமில்லை.
இயற்கையுடன் ஒன்றி இணைந்து வாழ்ந்த தமிழ் மரபினை, பிறந்த குழந்தையின் நெஞ்சை நெல் முனையால் மெலிதாக கீறி இரத்தத்தை, குல தெய்வம் கொற்றவைக்கு வீர காணிக்கையாக்கும் வேளிர் குலத்தை வேரோடு அழித்த குற்ற உணர்வாக கூட இருக்கலாம்.
அற்றைத் திங்கள் அவ்வெண்ணிலவில்
எந்தையும் கொண்டோம், நம் குன்றும் பிறர் கொளார்
இற்றைத் திங்கள் இவ்வெண்ணிலவில்
வென்று எரி முரசின் வேந்தர் எம்
குன்றும் கொண்டார்; யாம் எந்தையும் இலமே.
கடையேழு வள்ளல்களில் ஒருவரான, வேள் பாரியின் மகளிர் இருவரும், வேள் பாரியின் உற்ற நண்பரான கபிலரின் துணையுடன், பறம்பை விட்டு செல்கையில் நிலாவைப்பார்த்து சொல்வதாக இந்த சங்க கால பாடல்.
வெளிப்புறத்தில் கண்களில் நாம் காணும் காட்சியே, நம் நினைவலைகளில் இருக்கும் காட்சிகளை ஒன்றிணைத்து புதிய எண்ணங்களை உருவாக்குகிறது. ஐம்புலன்களில் பெறப்படும் உணர்வுகளும், முந்தைய நினைவலைகளுடன் ஒருங்கிணைத்து, தொடர்ந்து எண்ண அலைகளை உருவாக்கிய வண்ணம் உள்ளது.

ஒரு உதாரணத்திற்கு சொல்கிறேன். உங்கள் காதுகளில் ஒரு திரைப்படப்பாடல் கேட்கிறது என்று வைத்துக்கொள்வோம்.
அன்று வந்ததும் இதே நிலா
இன்று வந்ததும் அதே நிலா
இந்த பாடலை முதல் முதல் கேட்ட சூழல் மனதில் வந்து போகிறது. அது மட்டுமல்ல, அது தந்த காலத்திற்கேற்ற எண்ணங்களும் சிறகடிக்கிறதல்லவா? அதே பாடல் இன்றைய சூழலுக்கு ஏற்ப பலவித எண்ண அலைகளை கிளப்பி விட்டு செல்கிறதல்லவா?
யோகிகளும், ஞானிகளும் தங்களின் தவத்தின் பயனால் உடலுக்குள் ஒளிரும் நிலவை பார்க்கும் வரம் கைவரப்பெற்றவர்கள். அகத்தில் ஒளிரும் நிலா வெளிச்சம் மட்டுமல்லாமல், புற உலக காட்சிகளையும் காட்ட வல்லது.
அகத்தினுள் ஒளிரும் தீபத்தின் காட்சியை நாம் காணும் அருந்தவப்பேறு பெற்றால், கருணை மழை பொழியும் பராசக்தியின் அருளால், தொலை தூர காட்சிகளையும், உலகத்தில் உள்ள பொருட்களெல்லாம், சூரிய ஒளியில் தெளிவாக தெரிவது போல், உள்ளத்தினுள் ஞான திருஷ்டியில் தெளிவாக தெரியும்.
தூர தரிசனம் சொல்லுவன் காணலாம்
கார்ஆரும் கண்ணி கடைஞானம் உள்பெய்து
ஏர்ஆரும் தீபத்து எழில்சிந்தை வைத்திடில்
பார்ஆரு(ம்) உலகம் பகல் முன்னதாமே.
- திருமந்திரம் 823
எண்ண அலைகளின் குவிப்பால் அந்த ஆதி பராசக்தியின் அருள் பெற்றால், இன்றைக்கே நாம் உலகு முழுவதும் இருக்கும் இடத்திலிருந்தே காணலாம்.
No comments:
Post a Comment