Sunday, April 26, 2020

பேரொளி


பேரொளி 

B.  O.  Y.   பாய், பாய்னா பையன்
G.  I.  R. L.  கே[ர்]ள், கே[ர்]ள்னா பொண்ணு
இந்த பொண்ணைக்  கண்டதும்
ஏதோ போதை உண்டாகுதே..


கையால் மேனியை                                                                                                                    தொட்டால் உண்மையில                                                                                                    கரன்ட்டு  போல் ஷாக் அடிக்குதம்மா 

'சூரிய ஒளிக்கதிர்களை நோயாளிகளின் உடலில் பாய்ச்சுங்கள். பெருந்தொற்றை ஒழிக்க இதுவே வழி' - அமெரிக்க அதிபர் டிரம்ப் தன் கண்டுபிடிப்பை TV-யில் அறிவித்துக்கொண்டிருந்தார்.

இந்திய விஜயத்திற்குப்பின் ட்ரம்பின் அணுகுமுறை இந்தியர்களை போலவே இருக்கிறது, என்று நினைத்துக்கொண்டிருக்கும்போது மாடிப்படிக்கட்டில் யாரோ இறங்கி ஓடும் சப்தம் கேட்டது  ரகுவிற்கு.

'அது ஒண்ணுமில்லீங்க, எதோ ரெண்டு சின்னங்சிறுசுங்க மொட்ட மாடில பேசிட்டிருந்திருக்காங்க. நம்ம சின்னாத்தா போய் சத்தம் போடுது' - வெளியே வந்த ரகுவிற்கு பக்கத்து யூனிட்காரர் விளக்கினார்.

சப்தம் கேட்ட வினாடி நேரத்துக்குள், அந்த குடியிருப்பு முழுவதும் மின்னல்  பாய்ச்சும்  ஒளிவெள்ளம் போல், அரக்க பரக்க பேச ஆரம்பித்து விட்டார்கள், அந்த சின்னஞ்  சிறுசுகளைப்பற்றி.

'கலி முத்திருத்தோன்னோ..' - ஆறு குழந்தைகளை, வருஷாந்தரமா பெற்றெடுத்த,  எதிர்த்த யூனிட்  வயதான மாமி அங்கலாய்த்துக்கொண்டாள்.


மேல்ஒளி கீழதன் மேவிய மாருதம்
பால்ஒளி அங்கி பரந்தொளி ஆகாசம்
நீர்ஒளி செய்து நெடுவிசும்பு ஒன்றிலும்
மேல்ஒளி ஐந்தும் ஒருங்கொளி ஆமே.
                                                                      - திருமந்திரம் 2685
பிரபஞ்சமாய் பரிணமித்திருக்கும் பஞ்ச பூதங்களான நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம், இவற்றில் நீக்கமற ஒளிரும் ஒளி,  உடலுக்குள்ளும்  ஒடுங்கி ஒளிர்ந்து கொண்டிருக்கிறது. 

விளங்கொளி மின்ஒளி ஆகிக்  காந்து
துளங்கொளி ஈசனைச் சொல்லும் எப்போதும்
உளங்கொளி ஊனிடை நின்று உயிர்க்கின்ற
வளங்கொளி எங்கும் மருவி நின்றானே.
                                                                      - திருமந்திரம் 2687
'ஓம்' என்றும் 'ஓம் நமக்ஷிவய' என்று தியானித்து சொல்லும்போது உடலில் ஒளிர்ந்து கொண்டிருக்கும் ஒளியானது, மின்னலைப்போல் உடலுக்குள் ஒளிரும் தன்மை பெரும். 

விளங்கொளி அவ்ஒளி  அவ்இருள் மன்னும்
துளங்கொளியான் தொழு வார்க்கும் ஒளியான்
அளங்கொளி ஆரமுது ஆகநஞ்சு ஆரும்
களங்கொளி ஈசன் கருத்து அதுதானே.
                                                                       - திருமந்திரம் 2688
மின்னலைப்போல் ஒளிரும் அமிர்தம் போன்ற ஒளியானது, உடலில் உள்ள நஞ்சினை முறிக்கக்கூடிய தன்மை பெரும்.

மேற்கத்திய நாடுகள், கண்ணின்  புறத்தே காணும் பொருள்களில் கொள்ளும் ஆர்வமும், கிழக்கத்திய நாடுகள்  கண்ணின்  அகத்தே உள்ள சூக்கும நிலைகளில் கொள்ளும்  ஆர்வமும்  வேறு வேறானவை அல்ல.

No comments:

Post a Comment

கல்லிலே கலைவண்ணம்

கல்லிலே கலைவண்ணம்     எனக்கு தீப ஆராதனை.  இவ்வளவு நேரம் என் மேனியெல்லாம் அபிஷேகம். பால், தேன், பஞ்சாமிர்தம் என வெவ்வேறு உணவு, வாசனை திரவியங்...