கடவுள் - உணர்ந்தனன் நான்கு
காற்றில் மிதக்கும் ஒலிகளிலே
கடலில் தவழும் அலைகளிலே
இறைவன் இருப்பதை நானறிவேன்
என்னை அவனே தானறிவான்
வருத்தம் தெரிவித்த சரளாவிற்கு, மனதுக்குள் நன்றி தெரிவித்தான் சரவணன்.
வெட்கம் பிடுங்கி தின்றது ஒரு பக்கம்; உடல் முழுக்க புல்லரிக்கும் ஆனந்தம் மறுபக்கம், சரளாவிற்கு.
குண்டும் குழியுமான சாலையை காரணம் சொல்வதா, நகர்ப்புற பேருந்தில் இருந்த நெரிசலா, இல்லை திடீரென்று பேருந்தை நிறுத்திய ஓட்டுனரை குற்றம் சொல்வதா?
மாத்திரை கால அளவில் நிகழ்ந்து முடிந்து விட்டது.
இதுநாள்வரை கண்களால் மட்டுமே பேசிக்கொண்டிருந்தவர்களை உடலால் மோத வைத்து, அணைக்க வைத்தது பேருந்தின் திடீர் நிறுத்தம்.
இருவரும் தன்னிலை அடையவில்லை. இது, இவர்களின் இறுதி நாள் வரை தொடரும் மறக்க முடியாத இன்ப பேருணர்வாக அமையும் என்பது மட்டும் மறுக்க முடியாத உண்மை.
இப்பொழுது நடந்தது என்ன?
உடல்கள் ஒன்றை ஒன்று அணைத்து மீண்டது, இமைக்கும் கால அளவில்.
உடலின் அனைத்து சிற்றறைகளுக்கும் செய்தி பரிமாறப்பட்டது. ஆனால் அதை உணர்ந்தது உடலின் எந்த பகுதி? உடல் ஒரு கருவியே, அதாவது புலன்களின் ஓரங்கமான ஞானேந்திரியம் மட்டுமே.
உணர்ந்தது மனம். மனம் என்பது ஒளி உடல். இது பல கோடி பிறப்புகளை கொண்டது.
கேளப்பா புலத்தியமா ரிஷியேஐயா
கிருபையுள்ள கரணம் அந்தக்கரணந் தன்னை
கோளடா இல்லாத மனம் தானொன்று
கூர்மையுடன் நின்றிலங்கும் புத்தி ஒன்று
தேரடா ஆங்காரம் ஆனதொன்று
சிவ சிவா சுத்த மென்ற சித்தமொன்று
ஆளடா கரணமென்ற கரணம் நான்கும்
அப்பனே அறிந்துகொண்டு வாற்றுமம் பாரே.
- அகத்தியரின் சௌமிய சாகரம் 32
உயிரோடு கலந்த சக்தி, மாயை நிலையில் இயங்கும் உடல், உணர்வுதனை மனதுக்கு வழங்குகிறது. மனதிற்கு என்று தனிப்பட்ட எந்த கோளும் அதாவது புலனுறுப்பும் இல்லை.
ஆயினும், 1. மனம் 2. புத்தி/அறிவு 3. ஆங்காரம் 4. சித்தி என்ற நான்கு படிகளில் மனித உணர்வுகளை வழி நடத்துகிறது.

கண்டிட்ட மனத்தாலே தவமு மாச்சு
கவர்ந்தவுயி ராவதும் மனமே யாச்சு
மண்டிட்ட வாயுமேல் மனமு மாச்சு
மகத்தான சஞ்சலத்தால் மனம்பே யாச்சே
அண்டிட்ட தீப்போல மனந்தான் சென்றே
யகண்டத்திற் சென்றாலதுதான் போதம்
மண்றிட்ட மனம் விட்டால் ஞானம் போச்சு
வாசியைத்தா னழுகவிட்டால் யோகம் போச்சே.
- போகர் 7000 - 146
உயிரின் சக்தியாக மனம் இயங்குவதை தவத்தால் அறியலாம். வாசி யோகம் வழியாக மனதின் நான்காம் தன்மையான ஞானத்தை, சித்தியை அடையலாம்.
நின்றாள் அவன்தன் உடலும் உயிருமாய்ச்
சென்றாள் சிவகதி சேரும் பராசத்தி
ஓன்றாக என்னுள் புகுந்துணர் வாகியே
நின்றான் பரஞ்சுடர் ஏடங்கை யாளே.
- திருமந்திரம் 1066
உடலும் உயிருமாய் ஒன்றி நிற்கும் ஒளி உடலில் நிற்கும் மனம், ஐம்புலன்களால் பெறப்படும் செய்திகளை உணர்வு நிலையாய் அறிகிறது. எடுக்கும் ஒவ்வொரு பிறவியிலும் மனம் அனுபவத்தை மட்டும் எடுத்து கர்ம வினையாக சேமித்து கொள்கிறது.
மனம் - உணர்வு, இவை மனிதனுக்கு வழங்கப்பட்ட,கடவுளின் நான்காம் குணம்.
அணுவியல்/அறிவியல் கடவுளின் மூன்றாம் குணத்துடன் என்னிடமிருந்து விடை பெற்றுக்கொண்டது.

தங்கள் குரு யார்?
ReplyDeleteதிருமந்திரம் எங்கு கற்கிறீர்கள்?