கடவுள் - நின்றனன் மூன்றினுள்
ஏதோ ஏதோ ஏதோ
ஒரு மயக்கம் அது
எப்படி எப்படி எப்படி
வந்தது எனக்கும்
'அணுவியலில் கண்டறியப்பட்ட தனிமங்கள், அதன் குணங்களுக்கேற்ப, திட, திரவ மற்றும் வாயு என பகுத்தறியப்பட்டுள்ளது. தனிமங்களின் அணுக்களின் நியூக்ளியஸ் என்னும் கருவானது, புரோட்டான் மற்றும் நியூட்ரோன்களை கொண்டுள்ளது. இதில், நிறையுள்ள புரோட்டான்களின் எண்ணிக்கைக்கேற்ப அதனைச் சுற்றி வரும் எலெக்ட்ரான்களின் எண்ணிக்கை அமைந்து உள்ளது.' - இது அறிவியல் சொல்லித்தரும் பாடம்.
இதில் நியூட்ரானை உயிர் என்று எடுத்துக்கொண்டால், புரோட்டான் சக்தியாக நிற்கிறது. உயிரையும், சக்தியையும் கொண்டுள்ள உடல் இயங்க எலக்ட்ரான் என்னும் எதிர் சக்தி தேவைப்படுகிறது, அந்த எதிர் சக்தியை 'மாயை' என்று நமக்கு உணர்த்தும் ஆன்மீக குணமே கடவுளின் மூன்றாம் குணம்.
இந்த மாயையின்பால் சிக்கித் திணறும் மனிதர்களின் தலையாய ஆசைகளை போகர் சித்தர் இவ்வாறு தெரிவிக்கிறார்:
உலகினரின் இயக்கம்:
1. மண்ணாசை
2. உணவாசை
3. பெண்ணாசை [ஆணாசை]
4. பொன்னாசை
5. குடியாசை
6. குடும்ப ஆசை
புகழுக்காகவும், அதிகாரத்திற்காகவும் கொள்ளும் ஆசையும் மாயையில் சேர்த்தியே.
கோடியென்ற நரசென்ம மண்ணா சையாலுங்
குணமான தீனியதி னாசை யாலுஞ்
மோடியென்ற மோகப்பெண் ணாசை யாலும்
மோகத்தால் பூட்டும்பொன் னாசை யாலுஞ்
குடியென்ற சுகபோகச் சுகியி னாலுந்
துணையான பாசத்தின் மயக்கத் தாலும்
வாடியென்ற வுலகமெல்லா மயக்க மாச்சு
மக்களே வாய் ஞானப்பேச்சு மாச்சே.
- போகர் 7000 - 16
மேற்கண்ட ஆசைகளின் பிடியிலிருந்து வெளியேற திருவள்ளுவர் வழி சொல்லுகிறார்.
பற்றுக பற்றற்றான் பற்றினை அப்பற்றைப்
பற்றுக பற்று விடற்கு
- திருக்குறள் 350
இறைவனின் மூன்றாம் குணமான மாயையில், பிடிப்பு இல்லாமல் இருக்கும் இறைவனை விரும்பி பற்றிக்கொள்ளுங்கள்.
உற்றமுப் பாலொன்று மாயாள் உதயமாம்
மற்றைய மூன்று மாயோ தயம்விந்து
பெற்றவள் நாதம் பரையிற் பிறத்தலால்
துற்ற பரசிவன் தொல் விளை யாட்டிதே.
- திருமந்திரம் 399
விண்ணிலிருந்து மண்

ணில் மனிதனாக பிறப்பெடுக்கும் இறைவன், பேரொளியாக உயிராகவும், அளவற்ற சக்தியாகவும் மனித உடலாக பரிமளிக்கிறார். உயிரும், சக்தியும் இயங்க மாயை என்னும் மூன்றாம் பரிமாணத்தை ஏற்கிறார்.
இதனையே உலகம் இயங்க தேவையான ஆதார வித்துவாக கொள்ளலாம்.
உயிர் அகாரமாகவும், சக்தி உகாரமாகவும், மாயை மகாரமாகவும் இலங்கும் மூன்று குண நிலையே ஓம் எனும் பிரணவ மந்திரத்தின் மூலாதாரமாக விளங்குகிறது.
அ+உ+ம் = ஓம்
உயிர் அகாரமாகவும், சக்தி உகாரமாகவும், மாயை மகாரமாகவும் இலங்கும் மூன்று குண நிலையே ஓம் எனும் பிரணவ மந்திரத்தின் மூலாதாரமாக விளங்குகிறது.
அ+உ+ம் = ஓம்
*** ***
No comments:
Post a Comment