மண்ணுலகில் இன்று
தேவன் இறங்கி வருகிறார்
நல்ல மனிதர் நடுவில் குழந்தை
வடிவம் பெறுகிறார்
தேவன் இறங்கி வருகிறார்
நல்ல மனிதர் நடுவில் குழந்தை
வடிவம் பெறுகிறார்
காணொளி:
https://www.youtube.com/watch?v=sxfc6CgjCyk
'நான் பேச மாத்தேன். கோவமா வருது.' - பாலர் பள்ளியிலிருந்து வந்த அமையாவுக்கு, ஏன் கோபம் என்று தெரியாமல் தவித்தாள் விமலா.
'டேய், பிரகாஷ் நீயாவது சொல்லுடா, என்னாச்சு இவளுக்கு?'
'நீ பிகாஷ கேக்காதே. அவன்தான் என் பிண்ட்ஸ் கிட்ட தவிட்டு பாப்பான்னு சொன்னது.' - 'ர' உச்சரிக்க வராது அமையாவுக்கு.
'என்ன தவிட்டுக்கா வாங்கினே?'
'இல்ல பாரு. உன்னுடைய கை, விரல்கள் எல்லாம் அப்பா மாதிரியே இருக்கு. மூக்கு பாரு என்ன மாதிரியே இருக்கு'
'நான் எங்கிந்து வந்தேன்?'
'வாடி மயிலு. என் செல்லம், அம்மா வயித்துல இருந்துதான் வந்தே'
'எதுக்கு என்ன முங்கினே? பசிச்சா தோசை சாப்பிடு'
'இல்ல தங்கம். சாமிதான் உன்னை கொண்டுவந்து என் வயித்துக்குள்ள வெச்சாரு. அப்பாகிட்ட வேணும்னா கேட்டு பாரு'
'நீ சொல்லு பாட்டி. அம்மா பொய்.. பொய்.. தினம் என் கூட படுக்குது. கண் தொந்தா அப்பா கிட்டக்கிது' - அடுத்த அதிரடி குற்றச்சாட்டில் அமையா.
விண்ணின்று இழிந்து வினைக்குஈடாய் மெய்கொண்டு
தண்ணின்ற தாளைத் தலைக்காவல் முன்வைத்து
உண்நின்று உருக்கிஓர் ஒப்பிலா ஆனந்தக்
கண்நின்று காட்டிக் களிம்புஅறுத் தானே.
- திருமந்திரம் 113
விண்ணிலிருந்து இறங்கி, செய்திருந்த/செய்யவிருக்கும் வினைக்கு சமமான உடல் தந்து, குளிர்ந்த காலையும் தலைக்கு காவலாக வைத்து, ஒப்பில்லா சூரியப் பேரொளியை ஆனந்த நிலையில் உடலினுள் நிறுத்தி, தான் இறை மயமானவன் என்ற எண்ணத்தையும், முற்பிறவி எண்ணங்களையும் அவனிடமிருந்து அழித்து, ஆண்டவனே, மனிதனாக பிறக்கிறான்.
அமையவாகவும் பிறக்கிறான்.
No comments:
Post a Comment