போதை
வந்த போது
புத்தி இல்லையே
பொருள்:
'என்ன சென்ட் இது?' - உதட்டை துடைத்துக்கொண்டே முகத்தை சுழித்தாள், மதுமிதா.
'சென்ட் இல்ல, சரக்கு' - என்ற கணவனின் பதிலால் அவனை அதிர்ச்சியுடன் பார்த்தாள்.
'நாளைக்கு மதியம், நம்ம வீட்டுக்கு சாப்பிட பழனிச்சாமி வர்ரான். ஊரை விட்டு போய் பத்து வருஷம் கழிச்சு இப்பதான் வந்திருக்கான்'.
- இதென்ன புதுப்பழக்கம் இவனுக்கு என்று நினைக்ககூட மனமில்லாமல், பத்து வருடங்களுக்கு பின்னால் எண்ணங்கள் ஓடியது. பக்கத்து வீட்டில் இருந்த பழனிச்சாமி ஓடிப்போன நாள் நினைவில் ஆடியது.
'அப்படின்னா, அதுவும் சரக்கா?'
இன்னும் அவனுக்கு அந்த பழக்கம் போகலையா? இவனுக்கு வேறு குடுத்திருக்கான்.
*****
'இந்நேரம் ஊர் பூரா தெரிஞ்சிருக்கும். போலீசுக்கும் தகவல் போயிருக்கும்'- ரயில் நிலையத்தில் உட்கார்ந்திருந்த பழனிச்சாமிக்கு போதை சுத்தமாக தெளிந்து, பயம் மட்டும் மிச்சம் இருந்தது.
மதுமிதா வீட்டின் பின்புறத்தில் இருந்து, குளித்த தலையுடன் வெளியே வருவது கண்ணில் நிழலாடியது நினைவுக்கு வந்தது.
தன்னிலை மறைத்த போதையில், மதுமிதா அழைப்பது போன்ற பிரம்மையில், அவளை கட்டி அணைத்தது.. அதன் பின்னர் என்ன நடந்தது என்பது நினைவுக்கு வரவில்லை.
மதுமிதா, 'அம்மா' என்று கத்தியபோதுதான், அவளை என்ன செய்தோம் என்று புத்தியில் உரைத்தது. அவளிடம் இருந்து சட்டையில் பதிந்த ஈரத்தை துடைத்து விட்டுக்கொண்டான்.
திரும்ப ஓடி வரும்போது, தூளி காலில் இடறி சுவற்றில் மோதியது. ஒருவேளை, அதிலிருந்த அவள் அக்கா மகளின் குழந்தை செத்திருக்குமோ?
நினைக்க, நினைக்க ஒரே பயமாகவும், குழப்பமாகவும் இருந்தது.
அப்பொழுதுதான் கொல்கொத்தா புறப்பட்டுக்கொண்டிருந்த ஹௌரா எக்ஸ்பிரஸில், ஓடிப்போய் ஏறிக்கொண்டான்.
*****
'அம்மா..' என்று கத்தி விட்டு அதிர்ச்சியில் உறைந்தாள், மதுமிதா.
நல்ல வேளை, வீட்டில் யாரும் இல்லை. அம்மாவும், அக்காவும் கோவிலுக்கு போயிருந்தார்கள்.
'கொழந்தை தூங்குறான். பாத்துக்கோ. நாங்க கோயிலுக்கு போயிட்டு வர்ரோம்' - தூரமானதால் குளிக்க சென்றவளிடம், அக்கா சத்தம் போட்டு சொல்லி விட்டு போயிருந்தாள்.
மின்னல் வேகத்தில், மைக்ரோ செகண்ட் நேரத்தில் நடந்து முடிந்திருந்தது.
பழனிச்சாமியின் ஆக்கிரமிப்பை ஏற்றுக்கொள்ளவோ, நிராகரிக்கவோ அவளுக்கு சந்தர்ப்பமே இல்லை.
ஹை வோல்டேஜ் மின்சாரம் பாய்ந்தது போல் உடலும், மனமும் விழித்துக்கொண்டது. உடலில் உள்ள எழுபத்திரண்டாயிரம் நாடிகளும் உயிர்ப்பு நிலைக்கு போயிருந்தது.
முதல் இரண்டு நாட்கள், மிதமான காய்ச்சலும், ஒரு வாரம் வரையிலும் நடுக்கமுமாக இருந்தவள், பக்கத்து வீட்டில் பழனிச்சாமி காணாமல் போய் தேடுகிறார்கள் என்ற செய்தி வந்த பின்னால்தான், தன்னை ஆசுவாசப்படுத்திக்கொண்டாள்.
கொஞ்ச நாட்களில், தனக்குத்தானே ரசித்து சிரித்துக்கொள்ளும் அளவிற்கு, அந்த நினைவும், மணமும் அவளை ஆக்கிரமித்துக்கொண்டது.
ஆயிரம் உறவுகள் வருவதுண்டு
ஆனால், இதுதான் முதல் உறவு.
*****
அமரர்களும் அடக்க முடியாத, ஐம்புலன்களை கட்டுக்குள் கொண்டுவர திருமூலர், பரியங்க யோகம் என்ற ஒரு யோகத்தை நமக்கு காட்டுகிறார்.
பரியங்க [கட்டில்] யோகத்தின் மூலம், ஐம்புலன்களும் நம்முடன் சேர்ந்தியங்கும் வகையும், இந்திரியங்களின் சக்தி உடலில் சேமிப்பதற்கான வழியும், வானீர் அமுதம் சுரப்பதற்கான உபாயமும் ஆகும் என்று கூறுகிறார்.
ஆனால், ஒரு துரதிர்ஷ்டம் என்னவென்றால், ஆணுக்கு வயது முப்பதும், பெண்ணுக்கு வயது இருபதும் இருக்க வேண்டும்.
ஏய்ந்த பிராயம் இருபது முப்பதும் வாய்ந்த குழலிக்கு மன்னர்க்கு மானந்தம் வாய்ந்த குழலியோ டைந்து மலர்ந்திடச் சோர்ந்தன சித்தமுஞ் சோர்வில்லை வெள்ளிக்கே- திருமந்திரம் 833
இதுல ஏதாவது தப்புத்தண்டா பண்ணினீங்க, என்னாகும்னு போகர் சித்தர் சொல்றாரு கேளுங்க.
கருமமாய்ப் பூதமெல்லாம் லயமே செய்து
காரணமாந் தத்துவத்தை லயமே செய்து
நருமமாய்க் குருபதத்தி னாடி நின்று
நயந்துமே யேறுவார் கடினம் மெத்த
பருமமாய்ப் பரியங்க யோகத் தாலே
பரிந்து மலம் விடுவார்கள் கருமங் கருமம்
நிருமமாய் மிக்கான ராச யோக
நிலைத்தல்லோ சாதித்து நினைவைப் பாரே. 353
- சித்தர் போகரின் ஏழாயிரம் பாடல்கள்
No comments:
Post a Comment