வாலை ரசம்
யாரது யாரது
தங்கமா..
யாரது யாரது
தங்கமா..
பொருள்:
'ஹய்யோ.. அம்மா.. கிண்டல் பண்றதுகூட தெரியாம சிரிக்கிறியே, 'எம்புருஷன் என்னை புகழ்ந்துட்டார்னு' '
போட்டுக்கொடுக்கிறதுல, பர்ஸ்ட் கிளாஸ் என் மகள்.
'நீதான் என் தங்க மயில்' என்று மகளை ஆசையில் சொன்னதும், 'அப்ப, நானு?' - என்று கேட்ட மனைவிக்கு 'நீ தங்க ரதம்' என்று வழிந்ததுக்கு மகளின் பதில் அது.
'நீ குண்டுன்னு சொல்லுது அப்பா.. நீ சந்தோசமா சிரிக்கிறே'
'ஓம்' எனும் பிரணவ மந்திரத்தில், வாலையாக நிற்கும், என்னுடைய குடும்பம் என்னும் ஈர்ப்பு, மூவரையும் மகிழ்ச்சியில் திளைக்க விடுகிறது.
பாசம்.
*** ***
'என்னடா பண்றே, செல்பி எடுக்கும்போது..' - பின்னால் நிக்கிறவங்களுக்கு மறைக்க கூடாதுன்னு காலை கொஞ்சம் மடக்கி உயரத்தை குறைத்த சக ஊழியரை பார்த்து கிண்டல் கேள்வி.
'இப்பத்தாண்டா, கிரிக்கெட் முடிச்சிட்டு வந்தோம். விக்கெட் கீப்பர் போஸ் குடுக்கிறான்'- சந்தோசமாக ஒருவரை ஒருவர் உரசிக்கொண்டார்கள்.
நாளின் அதிக நேரம் ஒன்றாக கூடி இருக்கும் அலுவலக தோழமை, ஈர்ப்பின் மற்றொரு பரிமாணத்தில், உயிர்ப்புடன் 'ஓம்' வெளிப்பட்டுக்கொண்டிருந்தது.
*** ***
'இதோ நான் கொண்டு வர்றேன்'- பக்கத்துக்கு வீட்டு அம்மா ஓடிப்போய் நாலைந்து மெழுகுவர்த்தி கொண்டு வந்து கொடுத்தார்கள்.
எல்லா ஏற்பாடுகளும் செய்து, டெக்கரேஷன்ஸ் முடிச்சு, பர்த்டே கேக் டேபிளின் மேல் வச்ச பின்னால்தான் தெரிஞ்சது, கேண்டில் இல்லைனு.
குழந்தைகளின் ஆனந்தம், சக குடும்பங்களின் ஒருங்கிணைந்த சந்தோசம், அந்த பிறந்த நாள் கொண்டாட்டத்தில் வெளிப்பட்டுக்கொண்டிருந்தது 'ஓம்'
என்னும் ஈர்ப்பாக.

'சார், அனுப்புனவங்க டீடைல்ஸ் தெரியல. ஒருவேளை பேக்கிங் உள்ளார இருக்கலாம்' - பரிசுப்பொருள் அனுப்பும் கடையிலிருந்து பதில் வந்தது, கேக்கும், சிவப்பு ரோஜா மலர்க்கொத்தும் வந்த போது.
இது ஒருவகை, சொல்லத்தான் நினைக்கிறேன் கவன ஈர்ப்பு தீர்மானம். வாழ்வின் சுவாரஸ்யங்களில் இதுவும் ஒரு அம்சமே, 'ஓம்' எனும் பிரணவம் இங்கும் வாழ்கிறது.

ஓம் எனும் பிரணவத்துள்ளே, அகர, உகர, மகார சேர்க்கை உள்ளது என்பது அறிஞர்கள் மற்றும் சித்தர்களின் அறிவு நிலை.
அ + உ + ம் = ஓம்
ஓம் எனும் பிரணவத்துள்ளே, அகர, உகர, மகார சேர்க்கை உள்ளது என்பது அறிஞர்கள் மற்றும் சித்தர்களின் அறிவு நிலை.
அ + உ + ம் = ஓம்
திருமந்திரம்-2056
வரும் வழி போம் வழி மாயா வழி
கருவழி கண்டவர் காணா வழியைப்
பெரும்வழி யாநந்தி பேசும் வழியைக்
குருவழியே சென்று கூடலுமாமே.
வரும் வழி போம் வழி - மூக்கின் வழியாக உள்ளே, வெளியே செல்லும் சுவாசக் காற்று, அகாரம் மற்றும் உகாரம்.
மாயா வழியே மகாரம், அதுவே மனித வாழ்வை அமைத்து கொடுத்து, எடுத்து செல்லும் ஈர்ப்பு சக்தி, மூன்றாம் கண்.
*** ***
No comments:
Post a Comment