சந்தி
கொதிக்க, கொதிக்க சுக்கு காப்பி.. சிறு துளி நாக்கை சுட்டது.
ஏற்றத்தில் உள்ள அடர்ந்த வனம் தாண்டி, சற்று சமவெளி பாதை ஆரம்பிக்கும் சந்திப்பு. வாடிக்கையாளர் அமர்வதற்கு, இரண்டு மூங்கில்களை இணைத்த இருக்கை.
அதிகாலை 1 மணி.
மலை ஏறிய வியர்வை ஒருபுறம். குளிர் காற்று மறுபுறம்.. உடலை ஜில்லிக்க வைக்கும் குளிர்ப்பிரதேசம்.
'சூடான சுக்கு காப்பி.. சுக்கு காப்பி'- கடைக்காரரின் அழைப்பு ஒன்றிரண்டு மலை எறிகளை நிற்க வைக்கிறது.
'இருபது ருபாய்'- விலை என்னவென்று கேட்டவருக்கு பதில் சொல்லுகிறார், மனைவி காப்பி தயாரிக்க, வாடிக்கையாளர்களை கவனித்துக்கொண்டிருந்த கடை முதலாளி. இரண்டு பேர் கண்களிலும் தூக்கமிருப்பது தெளிவாக தெரிகிறது.
என்ன பெரிதாக வியாபாரம் செய்து விட முடியும். மீறி, மீறிப்போனால் நான்கு அல்லது ஐந்து நாட்கள் மட்டுமே கடை நடத்த முடியும். பகலில் சுக்கு காப்பி தேவை இருக்காது. போட்ட பணம் எடுக்க முடியுமா போன்ற கேள்விகள், கணக்கர் வேலையை மனம் கணித்துப் பார்க்கிறது.
காப்பி சுவைக்குள் மனம் செல்கிறது.
'நான்காவது மலையும், ஐந்தாவது மலையும் சந்திக்கிறது இங்கே'- காதில் விழுந்த இந்த செய்தியில் சந்தியில் ஏனோ மனம் ஒட்டிக்கொண்டது.
பகலும், இரவும் எங்கே சந்திக்கும்.. இரவு தன் பணி முடித்து, இரவும், பகலும் எங்கே சந்திக்கும்.
பௌர்ணமி நிலவு மறைந்து கருக்கல் வருவதற்குள் ஏழாவது மலை ஏறி அந்த வெள்ளியங்கிரி நாதன் சந்நிதி அடைந்து விட வேண்டும். கருக்கல், அமாவாசை இரவை விட இருட்டு அடர்த்தியாக இருக்கும்.
விழிப்பும், உறக்கமும் எங்கே சந்திக்கும்.. உறக்கம் முடித்து விழிப்பை எங்கே சந்திக்கும்..
உள்ளிழுக்கும் மூச்சுக்காற்றும், வெளி விடும் மூச்சுக்காற்றும் எங்கே சந்திக்கும்..
நல்ல இரத்தமும், கரி ஏறிய இரத்தமும் எங்கே சந்திக்கும்..
விழிப்பும், உறக்கமும் சந்திக்கும் மாத்திரை அளவு நேரத்திற்குள், எண்ணங்கள் ஒரு புது உலகை படைத்து, நம்மை அவ்வுலகத்துடன் இணைத்ததை உணர்ந்திருப்போம். ஐம்புலன்கள் ஓய்வு பெரும் நேரமிது.
அனால், ஐம்புலன்களும் விழிப்பு நிலையில், தன்னிலை கரைந்து, நம் உயிர், இறைமையை சந்தி செய்யும் காலம், மோட்ச நிலை.
அதுவே பிரம்மானந்தம்..
சித்தவேதம் விளக்குகிறது, மோட்சத்தை.
சந்தியில் உள்ளது சகலமும்.
[கடைசியில், என்னையும் மறை பொருளில் எழுத வைத்து விட்டாயே, வெள்ளியங்கிரி ஆண்டவா!]
Tamil Amav முக்தி நிலை என்பது
உண்மையில் எய்த வேண்டிய ஒன்றா என்று பலமுமுறை எண்ணிப்பார்த்ததுண்டு ......
எனக்கென்னவோ இல்லை என்று தான் பதில் வரும் .....
பிரபஞ்சம் தொடர்ந்து விளக்கியது......
மனிதர்களின் , பிற உயிர்களின் , சடத்தின் இயல்பு நிலை முக்தி நிலை ....
சடம் அதிலிருந்து வழுவுவதில்லை.....
பிறவுயிர்கள் உணர்வால் அந்நிலையிலிருந்து சற்று ததும்புகின்றன.... இருப்பினும் தள்ளிப்போவதில்லை .....
அந்தோ பரிதாபம் மானுடம்
இயல்பு நிலை தனக்கு முக்தி நிலை என்பதை மறந்துவிட்டது ....
உண்மையில் மாயை வலுவானதுதான் ......
நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக அவன் யாரென அவனுக்கே நினைவு வாரா வகையில் நொடிபொழுது சோராமல் அவனை மூல நிலையிலிலிருந்து தான் வேறு பட்டவன் என்று எண்ணி அதனை தேடும் அளவிற்கு கொணர்ந்துவிட்டது.
யாம் தேட , நாட , சந்திக்க , அடைய
முயற்சிப்பது நம்மிடமே இருக்கும் ஒன்றை.....
இயல்பு நிலை , நழுவாமல் இருக்க தொடர்ச்சியாக மேற்கொள்ளும் முயற்சியே முக்தி நிலைக்கான யுக்தி
என்று பிரபஞ்ச சக்தி பலநேரம் எனக்கு
புத்தி சொன்னதுண்டு ....
இரண்டு இருந்தால் சந்திக்கும்
ஒன்றுதான் எனில் சந்திப்பு எங்கனம் சாத்தியம்...!
நன்றியுடன்
முனைவர் பச்சைவதி
நம் இயல்பு நிலை 'ஆனந்த நிலை'. புலன்களின் தொடர் போராட்டத்தில் இருக்கும் மனம் ஆனந்த நிலையை அறவே இழந்து, இயல்பு நிலையை சந்திக்கும் வாய்ப்பே இல்லாமல் முடிந்து விடுகிறது.
முக்தி, மோக்ஷம் என்பதெல்லாம், நம்மைப்போன்றோருக்கு,
நம் வாழ்க்கை முறையும், இயல்பு நிலையும் இரண்டாகி ஒன்றை ஒன்று சந்திக்காமல், ஒன்றாக ஒன்றி இருப்பதே நாம் அடையக்கூடிய முக்தி.
சரிதானா?
மிக்க நன்றி, ஆழ்ந்த பொருட்செறிவு மிக்க கருத்தை வழங்கியமைக்கு.

வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வான்உறையும்
தெய்வத்துள் வைக்கப் படும்.
நம் வாழ்க்கை முறையும், இயல்பு நிலையும் இரண்டாகி ஒன்றை ஒன்று சந்திக்காமல், ஒன்றாக ஒன்றி இருப்பதே நாம் அடையக்கூடிய முக்தி.
சரிதானா?
மிக்க நன்றி, ஆழ்ந்த பொருட்செறிவு மிக்க கருத்தை வழங்கியமைக்கு.

No comments:
Post a Comment