அணுத்துகள்
நானசைந்தால்
அசையும்
அகிலமெல்லாமே
' நீ பாத்தே.. '
'சாமிய நான் பாக்கல. ஆனா, ஒரு பொருளை ஆக்கவோ அழிக்கவோ முடியாதுங்கற அறிவியல் உண்மைய நீ நம்பித்தானே ஆகணும்.'
The law of conservation of mass states that mass in an isolated system is neither created nor destroyed by chemical reactions or physical transformations. According to the law of conservation of mass, the mass of the products in a chemical reaction must equal the mass of the reactants.
'ஒரு பொருளை இன்னொன்றாக மாற்றலாமே தவிர, எதையும் ஆக்கவும், அழிக்கவும் நம்மால் முடியாதுன்னா, ஆக்கியது யார், முழு முதற்பொருள் என்ன?'
'அணு'
அணுவுள் அவனும் அவன்உள் அணுவும்
கணுவற நின்ற கலப்பது உணரார்
இணைஇலி ஈசன் அவன் எங்குமாகித்
தணிவர நின்றான் சராசரந் தானே.
- திருமந்திரம் 2010
அசையும், அசையாப் பொருட்களென எங்கும் நீக்கமற திகழும் இணையற்ற இறைவன், அணுவுக்குள் அவனும், அவனுக்குள் அணுவுமாய் நிற்கிறான்.
அணுவின் ஆற்றலை சொல்லவும் வேண்டுமோ. இன்று உலகையே அச்சத்தில் ஆழ்த்தி வைத்திருப்பது அணு குண்டு என்பது நிதர்சனமான உண்மை.
யுரேனியம் என்னும் தனிமத்தின் அணுவில் உள்ள ஆற்றல் தான் அணு குண்டாகவும், அணுமின் உற்பத்திக்கு எரிபொருளாகவும் உள்ளது.
எங்கும், எதிலும் 'அவன்' என்றால்.. 'நான்' யார் என்ற கேள்வி வருகிறதல்லவா?
'உனக்குள் ஜீவனாய் உறைபவனும் அவனே!'
அணுவினுக்குள் அணுவான உன்னுள் உறையும் அந்த ஜீவனின் அளவை அறுதியிட்டு சொல்கிறார் திருமூலர்.
மேவிய சீவன் வடிவது சொல்லிடில்
கோவின் மயிர்ஒன்று நூறுடன் கூறிட்டு
மேவிய கூறது ஆயிரம் ஆயினால்
ஆவியின் கூறு நூறாயிரத்து ஒன்றே.
- திருமந்திரம் 2011
பசுவின் உரோமம் ஒன்றினை ஒரு லட்சம் பாகமாக கூறிட்டால், லட்சத்தில் ஒரு பாகம் ஜீவனின் அளவாகும்.
'நீ உயிருடன் உள்ளவரை ஜீவனுள்ளவன்; உன்னுள் உறைபவன் இறைவன்.'
'இனிமேலும், 'நீ பாத்தே'-ன்னு கேப்பே?'