பிராணாயாமம்
நானொரு முட்டாளுங்க
ரொம்ப நல்லாப்படிச்சவங்க
நாலுபேரு சொன்னாங்க
நானொரு முட்டாளுங்க
நானொரு முட்டாளுங்க
ரொம்ப நல்லாப்படிச்சவங்க
நாலுபேரு சொன்னாங்க
நானொரு முட்டாளுங்க
படிக்க:
'ஒண்ணு சொல்றேன் நல்லா கேட்டுக்குங்க. நம்ம மக்கள் இருக்குற அவசரத்துல எது சொன்னாலும் நேரம் இல்லைனு சொல்லிட்டு ஓடிட்டே இருப்பாங்க. நல்ல வேளை, ஆண்டவன் மூச்சு விட்றத அனிச்சை செயலா வெச்சான். இல்லன்னா ஏகப்பட்ட பேர் மூச்சுவிட நேரமில்லைனு சொல்லி அவன்கிட்டயே போய் சேந்திருப்பான்' - நித்தியின் அட்டகாசமான சிரிப்பொலிக்கிடையே வந்த வாக்குதான் இது.
பிராணாயாமம் செய்வது எப்படி ?
வாமத்தால் ஈரெட்டு மாத்திரை பூரித்தே
ஏமுற்ற முப்பத் திரண்டும் இரேசித்துக்
காமுற்ற பிங்கலைக் கண்ணாக இவ்விரண்டு
ஓமத்தால் எட்டெட்டுக் கும்பிக்க உண்மையே. - திருமந்திரம் 573
ஏமுற்ற முப்பத் திரண்டும் இரேசித்துக்
காமுற்ற பிங்கலைக் கண்ணாக இவ்விரண்டு
ஓமத்தால் எட்டெட்டுக் கும்பிக்க உண்மையே. - திருமந்திரம் 573
பொருள் விளக்கம்:
இடது மூக்கின் வழியாக பதினாறு மாத்திரை அளவு காற்றை உள்ளிழுத்து, உள்ளிழுத்த காற்றை அறுபத்தி நான்கு மாத்திரை அளவு மூச்சடக்கி உள்நிறுத்தி, முப்பத்திரண்டு மாத்திரை அளவு வலது மூக்கின் வழியாக வெளியே விடவேண்டும்.
ஒரு மாத்திரை கால அளவு என்பது கண்ணிமைக்கும் நேரம்.
இடது மூக்கின் வழியாக பதினாறு மாத்திரை அளவு காற்றை உள்ளிழுத்து, உள்ளிழுத்த காற்றை அறுபத்தி நான்கு மாத்திரை அளவு மூச்சடக்கி உள்நிறுத்தி, முப்பத்திரண்டு மாத்திரை அளவு வலது மூக்கின் வழியாக வெளியே விடவேண்டும்.
ஒரு மாத்திரை கால அளவு என்பது கண்ணிமைக்கும் நேரம்.
பிராணாயாமத்தின்போது சொல்ல வேண்டிய மந்திரம் என்ன?
பாரப்பா பிராணாய வகைதான் ஐந்தும்
பத்தியுடன் சொல்லுகிறேன் பதிவாய்க்கேளு
நேரப்பா ரேசக பூரகமுங் கும்பகம்
நிசமான சவுபீசம் நிர்ப்பீசம் ஐந்து
காரப்பா குருவருளால் கண்டு தேறி
கருணையுடன் பிராணாயாமக் கருவைக்கண்டு
தேரப்பா தேறி மனந் தெளிவாய் நின்று
சிவ சிவா சிவயோகத் தீர்க்க மைந்தா.
- அகத்தியரின் சௌமிய சாகரம் 251
பொருள் விளக்கம்:
மூச்சுக்காற்றை உள்ளிழுத்தல், உள்நிறுத்தல் மற்றும் வெளியேற்றுதல் என மூன்று செயல்கள் நடை பெறுகின்றது.
காற்றை உள்ளிழுத்து, உள்நிறுத்தும் வேளையில் - ' ஓம் நமக்ஷிவய' என்றும்
உள்நிறுத்தலில் இருந்து வெளியேற்றும் வேளையில் - 'க்ஷிவயநம ஓம்' என்றும் மந்திரத்தை மனதில் சொல்ல வேண்டும்.
இவைகளே பிராணாயாம வகைகள் ஐந்து ஆகும்.
மந்திரம் [மந் + திரம்] என்பது மனதினை ஸ்திரமாக்கும் அக்ஷரங்கள்.
மொழியில் உள்ள எழுத்துக்கள் வேறு, அக்ஷரங்கள் வேறு. மொழியின் வாதத்தால், 'நமக்ஷிவய' என்ற ஐந்தெழுத்து மந்திரத்தின் மகத்துவத்தை நாம் இழந்துவிடக்கூடாது.
உரைக்கவே ரேசகந்தான் விடுவ தாகு
மோங்கியதோர் பூரகந்தா னுள்ளே வாங்கல்
தரைக்கவே கும்பகந்தம் பித்தி ருத்தல்
தாங்கியதோ ருந்பீச மந்திரத்தி லூடல்
விரைக்கவே நிர்ப்பீச மந்திரத்தை விட்டு
வெளியிலே பூரித்தல் மெதுவி லேதான்
அரைக்கவே யஞ்சு விதம் பிராணாயாமம்
அசையாம லாசனத்தி லிருத்திப் பாரே.
- போகரின் ஏழாயிரம் பாடல்கள் 311
பொருள் விளக்கம்:
போகரும், அகத்தியரின் கருத்தை அப்படியே வழி மொழிகிறார்.
பிராணாயாமம் உள்ளே என்ன செய்கிறது?
குரு: அப்பொழுது ஜீவன் ஈஸ்வரனோடு ஐக்கியமாயிற்று. இதற்கே 'ஜீவா ஈஸ்வரோரைக்கியம்' என்று சொல்லப்படுகிறது. ஜீவன் ஈஸ்வரனோடு ஐக்கியமானால் என்னவாகும்?
சிஷ்யன்: மோக்ஷமாகும்.
குரு: இதற்கேதான் பிராணனையும், அபானனையும் ஐக்கியப்படுத்துவதென்று சொல்லுவது. பிராணன் நம்முடைய உள்ளில் இருக்கிறது. அபானன் வெளியில் போகிறது. அப்படி வெளியில் போகின்ற அபானனை, வெளியில் போகவிடாமல் பிராணனுடன் சேர்த்து உள்ளிலேயே ஒரே கதியாய் நடத்துவதற்குத்தான் 'பிராணாயாமாம் என்று சொல்லுவது. பிராணாயாமம் என்றால் பிராணனை ஆயாமம் செய்கிறது. ஆயாமம் செய்கிறதென்றால் தடுத்து நிறுத்துகிறது அல்லது நேரே கொண்டு போகின்றது.
- சிவானந்த யோகியின் சித்த யோகம்
பொருள் விளக்கம்:
நாம் உள்ளிழுக்கும் காற்று பத்து வாயுக்களாக மாறி நாடிகளை புத்துயிர் பெறச்செய்கிறது.
பிராணயாம பயிற்சியின்போது நம் உயிர்நிலையான குண்டலினியை, இறை சக்தியுடன் இணைக்கும் வேலையை செய்கிறது.
பிராணாயாமம் செய்வதால் உண்டாகும் பலன்கள் என்ன?
இட்டது அவ்வீடு இளகாது இரேசித்துப்
இட்டது அவ்வீடு இளகாது இரேசித்துப்
புட்டிப் படத்தச நாடியும் பூரித்துக்
கொட்டிப் பிராணன் அபானனும் கும்பித்து
நட்டம் இருக்க நமன்இல்லை தானே.
- திருமந்திரம் 574
பொருள் விளக்கம்:
பத்து நாடியும் உயிர்ப்புடன் இருக்க, எமன் உயிரை எடுத்து விடுவானோ என்ற கொரோனா பயம், பிராணாயாமம் செய்வோர்க்கு இல்லை.
பத்து நாடியும் உயிர்ப்புடன் இருக்க, எமன் உயிரை எடுத்து விடுவானோ என்ற கொரோனா பயம், பிராணாயாமம் செய்வோர்க்கு இல்லை.