வேதியல் வினை
உன்னை நான் பார்க்கும்போது
மண்ணை நீ பார்க்கின்றாயே
விண்ணை நான் பார்க்கும்போது
என்னை நீ பார்க்கின்றாயே
வேதியல் வினை
உன்னை நான் பார்க்கும்போது
மண்ணை நீ பார்க்கின்றாயே
விண்ணை நான் பார்க்கும்போது
என்னை நீ பார்க்கின்றாயே
தேவாமிர்தம்
சாட்சி சொன்ன
சந்திரனே
நீ போய் சேதி
சொல்ல மாட்டாயோ?
அரசனை அல்ல.. அரசினை.. அரச மரத்தை!
புருஷனை அல்ல.. புரசினை..
புரசு என்பதும் அரச மரத்தை போன்ற ஒரு பிள்ளை வரம் தரும் மரமே!
'அரச மரத்தை சுற்றி வந்து, அடி வயிற்றை தொட்டு பாத்தாளாம்'
அரச மரத்தை சுற்றி வந்தால் பிள்ளை வரம் கிடைக்குமா?
என்னவொரு முட்டாள்தனம்.. பத்தாம் பசலித்தனம்.. பகுத்தறிவற்ற காட்டுமிராண்டித்தனம்.
பேசாமல் செயற்கை கரு ஊட்டும் மருத்துவரிடம் சென்று, சொத்தை எழுதி வைக்க வேண்டியதுதானே புத்திசாலித்தனம். பிள்ளை வரம் கிடைக்காமலா போகும்.
பதினெண் சித்தர் காலத்தில், இந்த நவீன மருத்துவ முறை இருந்திருக்க வாய்ப்பில்லை. எனவே இயற்கையை சார்ந்து வாழ சொல்லி விட்டு போய் விட்டார்கள்.
இனி, அரச மரத்தின் சிறப்பை பார்க்கலாம், வாங்க.
காற்றில் கலந்துள்ள கரியமில வாயுவை தானுண்டு, அதிக அளவு பிராண வாயுவினை வெளிவிடும் தன்மை அரசுவிற்கு உண்டு.
பிராண வாயுவுடன், வியானன் வாயுவும் அதிகளவு இருந்திருக்க வேண்டும். அதுவும், காலை நேரங்களில் அதிகமான அளவு இருக்கும்.
நாம் சுவாசிக்கும் காற்றில் பத்து வகையான வாயுக்களின் தன்மை இருக்கிறது என்று சித்தர்கள் வழி காட்டி சென்றுள்ளார்கள்.
வியானன் வாயு தனஞ்சய வாயுவுடன் சேர்ந்து, பிள்ளைப்பேறு சம்பந்தமாக அனைத்து செயல்களையும் நம் உடலில் செய்கிறது, ஆரம்பம் முதல். அந்த வாயுவின் தன்மை பெற்றோர் உடலிலும் சார்ந்திருக்கும்.
காலம் கடந்தவன் காண்விந்து செற்றவன்
காலம் கடந்தழிந்தான் விந்து செற்றவன்
காலங்களில் விந்து செற்றுற்ற காரிகை
காலின்கண் வந்த கலப்பு அறியாரே.
- திருமந்திரம் 1954
காலத்தை வென்றவன், உடலில் விந்துவை விதைத்திருப்பவன். வீணடித்தவன் காலத்தால் வெல்லப்பட்டு அழிகின்றான். பெண்ணுடன் சேரும் காலங்களில், உடல்களுக்குள் சேரும் காற்றின் கலப்பினை யாரும் அறிவதில்லை. இந்தக் காற்றை, வீங்கற்காற்று என்று சொல்வார்கள்.
தனஞ்சயனும், வியானனும் சமமாக ஒத்து இயங்கினால் இன்பம்.
அரசமரத்துப் பிள்ளையாரும் பிள்ளை அருளுவார்.
திருவிழா
விழியே விழியே
உனக்கென்ன வேலை
விருந்துக்கு வரவா
நாளைக்கு மாலை
இது திருவிழாக்காலம்.
ஆடலும், பாடலும் இல்லாமலா?
நவராத்திரி என்றும் தசரா என்றும் பெண் தெய்வங்களை போற்றி வணங்கும் நேரம்.
துரியன் பழம்.
இந்தியாவில் அதிகம் பரிச்சயம் இல்லாத பழம். முதலில் பார்த்த போதும், சுவைத்த போதும் எனக்கு அதன் சுவையும், மணமும் உடன்பாடில்லை.
அதன் மருத்துவ குணங்கள், சுவை மற்றும் மணத்தின் தன்மையை தெரிந்து கொண்ட பின்னர், அதன் முட்களும், மணமும் என்னுடன் பயணிக்கவில்லை.
இப்பொழுது என்னால் துரியன் பழத்தை ரசித்து, சுவைத்து உண்ண முடியும்.
தமிழில் உள்ள பாடல்களும் அப்படித்தான். புத்தகத்தில், செய்யுள் பகுதி வந்தாலே வயிற்றை பிசையும். அப்படியே மனப்பாடம் செய்ய வேண்டிய கட்டாயம். பாடல்களில் உள்ள சங்கதி, சொல்லித்தரும் ஆசிரியர்களின் திறனை மீறிய பொருட்கள். மாணவர்கள் புரிந்து கொள்ளும் அளவு எங்கே சொல்லித்தருவது.
தமிழ் இப்பொழுது கொஞ்சம் கொஞ்சம் புரிகிறது. அதுவே எவ்வளவு ஆனந்தமாக இருக்கிறது.
தமிழையும் சரியாக புரிந்து கொள்ளாமல், மனு ஸ்ம்ருதி என்று வேற்று மொழியில் யாரோ எழுதியதை, யாரோ மொழி பெயர்த்ததை வைத்துக்கொண்டு இவர்கள் போடும் ஆட்டமும், பெண் தெய்வங்களை கொண்டாடும் திருவிழா நாட்களில் தேவைதானா?
கண்கள் காணும் காட்சிகளில், மாயையை போக்கும் குருவினை ஏற்றுக் கொள்ள வேண்டும். மாயையை போக்க முடியாதவர்களை குருவாக ஏற்றுக்கொண்டவர்கள், அவர்கள் காட்டும் மாயையில், அவர்களுடனே விழுந்து மறைந்து போகவேண்டியதுதான்.
குருட்டினை நீக்கும் குருவினைக் கொள்ளார்
குருட்டினை நீக்காக் குருவினைக் கொள்வர்
குருடும் குருடும் குருட்டாட்டம் ஆடிக்
குருடும் குருடும் குழி விழுமாறே.
- திருமந்திரம் 1680
இப்பேற்பட்ட குருவின் கருத்துக்களை எடுத்துக்கோளாக காட்டுவதனால், தனக்கு இயல்பாக இருக்கும் அறிவு நிலையும் போய்விடும். அரசியலுக்கு உன் நுண்ணறிவுதான் மூலதனம், அது அதிகம் செலவாகிவிடும், தேவையற்ற மிடுக்கான வாய் சவடால் பேச்சுக்களால்.
மூலதனம் அதிகம் செலவானால் என்னாகும் தெரியுமா?
ஆன முதலில் அதிகம் செலவானால்
மானம் அழிந்து மதிகெட்டுப் - போனதிசை
எல்லார்க்கும் கள்ளனாய் ஏழ்பிறப்பும் தீயனாய்
நல்லார்க்கும் பொல்லனாம் நாடு.
- நல்வழி 25
ஒளவைப்பாட்டியின் பேச்சுக்கு மறு பேச்சுண்டோ?
பூ விலை
சின்ன குடை போல் விரியும் இமையும்
விழியும் பார்த்தால் ஆசை விளையும்
'இந்து சனாதன தர்மத்தில் பெண்கள் அனைவருமே பூ விலை மகளிர் '
எழுதவே கூசும் வார்த்தைகளை, எப்படி இவர்களால் மேடைகளில் பேசி கைதட்டல் வாங்க முடிகிறது? - இப்படி ஒரு கூட்டம் தொடர்ந்து பேசிக்கொண்டே இருக்கிறது, தன்னைப் பெற்றவளும் பெண் என்பதை மறந்து.
எங்கோ பேசியதை, எதிர்க்கூட்டம் கட்டம் கட்டி எடுத்து தூபம் போட்டு மக்களிடையே பரப்புரை செய்து வன்மத்தை தூண்டுகிறது.
23-10-2020 இன்றைய சூடான தமிழக நிகழ்வு இது.
இரண்டு கூட்டமுமே ஒன்றை மறந்துவிட்டு இதனை அரசியலாக்கிக்கொண்டிருக்கிறது.
பரமஹம்சர் சிவானந்த ஸ்வாமிகளின் சித்த வேதம் என்ற புத்தகத்தில் சொல்வார்கள், 'ஒருவன் வடை, பாயசத்தோடு உண்ட இலையை வைத்து மற்றவர் அதன் சுவையை சொல்வது போல்தான்' நாம் படிக்கும் ஆன்மீக புத்தகங்கள்.
சனாதன தர்மத்தில் சொல்லப்பட்டு உள்ளதாலேயே, அந்த கருத்துகள், நிகழ் காலத்திற்கு ஏற்றதாகவும், தகுதி அற்றதாகவும் ஆகி விடாது.
உணவில் கல் இருந்தால் விலக்கி விட்டு உண்பது போல, நாம் நல்லதை மட்டும் நம் சிந்தனைக்கேற்ப எடுத்துக்கொண்டு மற்றதை விலக்கி வாழ கற்றுக்கொள்ள வேண்டும்.
பெண்மை என்பது மாபெரும் சக்தி.
ஒவ்வொரு அணுவுக்குள்ளும் உறையும் சக்தியே, நம் உடலில் ஒவ்வொரு சிற்றறைக்குள்ளும் உறைகின்றது. அந்த சக்தியை உணர்ந்து, உய்யும் வழியை மானிடம் அடையும் வழித்துணை அவர்கள் என்று திருமூலர் போன்ற தீர்க்கதரிசிகள் காட்டி சென்றுள்ளார்கள்.
உலகத்து உயிர்களை எல்லாம் தன்னுள்ளே கொண்டுள்ள அந்த ஆதி பராசக்தி உமையவள் என்னுள்ளும் கோவில் கொண்டுள்ளாள். பஞ்ச பூதங்களான நிலம்,
நீர் , நெருப்பு, காற்று, ஆகாயம் இவற்றில் உறையும் அதே சக்தி என்னுள்ளும் என் கண்களுக்குள்ளும் குடிகொண்டிருக்கிறாள்.
தன்னுளு மாகித் தரணி முழுதுங்கோண்(டு)
என்னுளு மாகி இடம்பெற நின்றவள்
மண்ணுளும் நீர்அனல் காலுளும் வான்உளும்
கண்ணுளும் மெய்யுளுங் காணலும் ஆமே.
- திருமந்திரம் 1354
கண்ணுக்குள்ளே வா வா.. நெஞ்சுக்குள்ளே போ போ.. என் ஜீவனே!
அர்த்தநாரி
பார்த்த இடத்திலெல்லாம்
உன்னைப்போல் பாவை
தெரியுதடி
'அர்த்தநாரி அல்லது மாதொருபாகன் என்றால்தான் என்ன?'
'ஹரத என்றால் பாதி. நாரி என்றால் பெண். இறைவன் பாதிப்பெண்ணானால் அர்த்தநாரி. மாதினை உடலின் ஒரு பாகமாக கொண்டால் மாதொருபாகன்.
'ஆண் பாதி, பெண் பாதியாக உள்ள ஓருடலாய் இறைவனை உருவகப்படுத்துவது சரியா?'
'எதனை எடுத்துரைக்க இந்த அவதாரம்?'
நம்முடைய உடலினை, அதன் ஆரம்பத்திலிருந்து பார்ப்போம்.
மனித உடலின் ஆதிக்கு செல்வோம். அங்கே ஆதியாய் ஆரம்பித்தது ஒரு செல், அதாவது ஒரு சிற்றறை. அந்த சிற்றறைக்குள் என்ன இருந்தது என்று பார்ப்போம், இப்போது.
ஓர்எழுத் தாலே உலகெங்கும் தானாகி
ஈர்எழுத் தாலே இசைந்துஅங்கு இருவராய்
'மூ'எழுத் தாலே முளைக்கின்ற சோதியை
மாஎழுத் தாலே மயக்கமே உற்றதே.
- திருமந்திரம் 885
ஓர் எழுத்து என்பது 'அ'காரம். சிவன் அகாரத்தால் உலகமுழுதும் [சிற்றறை] தானாகி, 'உ'காரத்தால் உடம்பினுள் [சிற்றறைக்குள்] கலந்து, மூவெழுத்தாகிய 'ம'காரத்தால் சக்தியுடன் [சிற்றறைக்கு சக்தி] இணைந்து, ஒளிப்பிழம்பாகவும், நாத மயமாகவும் விளங்குகிறான்.
அகாரம் + உகாரம் + மகாரம் = ஓம்
பிரணவ மந்திரம், 'ஓம்', நம் உடலில் பிரபஞ்ச நாதம் ஒலித்துக்கொண்டே இருக்கிறது. அர்த்தநாரி அல்லது மாதொருபாகன்.
முதல் சிற்றறை தொடங்கி, அதன் அம்சமாக கோடி கோடியான சிற்றறைகளாக, நம் உடல் இப்போது.
'பார்க்கும் இடமெல்லாம் பாவை தெரிவது இதனால்தான்'
அறிவியலும் இந்த சிற்றறை சித்தாந்தத்தில் அடங்கி போவதையும் பார்ப்போம்:
ஒரு காலத்தில், இதற்குமேல் பிரிக்க முடியாத சிறிய பகுதியாக அறியப்பட்டது அணுத்துகள். அதனை, பிரித்து பார்த்தபோது கிடைத்தது, மூன்று பொருள்கள்.
1. நியூட்ரான் 2. புரோட்டான் 3. எலக்ட்ரான்
நியூட்ரானும், புரோட்டானும் கரு மையமாக நின்றிருக்க, எலெக்ட்ரான் கரு மையத்தை சுற்றிவரும்.
புரோட்டானில் உள்ள நேர்மறை சக்தி எண்ணிக்கைக்கு சமமான எதிர்மறை சக்தி எண்ணிக்கை எலெக்ட்ரானில் இருக்கும்.
அதாவது,
நீ பாதி - நான் பாதி கண்ணே!
ஒளிக்கதிர் உடல் கண்ணுக்கு தெரிகிறது. உயிர் கண்ணுக்கு தெரிவதில்லை. கண் முன்னர் உயிரோடு இருந்தும், விடை காண முடியாத எத்தனையோ மாயைகளில் இதுவும...