ஒத்தஇவ் ஒன்பதின் மிக்க தனஞ்சயன்
ஒத்தஇவ் ஒன்பதில் ஒக்க இருந்திட
ஒத்தஉடலும் உயிரும் இருந்ததே.
திருவிழா
விழியே விழியே
உனக்கென்ன வேலை
விருந்துக்கு வரவா
நாளைக்கு மாலை
இது திருவிழாக்காலம்.
ஆடலும், பாடலும் இல்லாமலா?
நவராத்திரி என்றும் தசரா என்றும் பெண் தெய்வங்களை போற்றி வணங்கும் நேரம்.
துரியன் பழம்.
இந்தியாவில் அதிகம் பரிச்சயம் இல்லாத பழம். முதலில் பார்த்த போதும், சுவைத்த போதும் எனக்கு அதன் சுவையும், மணமும் உடன்பாடில்லை.
அதன் மருத்துவ குணங்கள், சுவை மற்றும் மணத்தின் தன்மையை தெரிந்து கொண்ட பின்னர், அதன் முட்களும், மணமும் என்னுடன் பயணிக்கவில்லை.
இப்பொழுது என்னால் துரியன் பழத்தை ரசித்து, சுவைத்து உண்ண முடியும்.
தமிழில் உள்ள பாடல்களும் அப்படித்தான். புத்தகத்தில், செய்யுள் பகுதி வந்தாலே வயிற்றை பிசையும். அப்படியே மனப்பாடம் செய்ய வேண்டிய கட்டாயம். பாடல்களில் உள்ள சங்கதி, சொல்லித்தரும் ஆசிரியர்களின் திறனை மீறிய பொருட்கள். மாணவர்கள் புரிந்து கொள்ளும் அளவு எங்கே சொல்லித்தருவது.
தமிழ் இப்பொழுது கொஞ்சம் கொஞ்சம் புரிகிறது. அதுவே எவ்வளவு ஆனந்தமாக இருக்கிறது.
தமிழையும் சரியாக புரிந்து கொள்ளாமல், மனு ஸ்ம்ருதி என்று வேற்று மொழியில் யாரோ எழுதியதை, யாரோ மொழி பெயர்த்ததை வைத்துக்கொண்டு இவர்கள் போடும் ஆட்டமும், பெண் தெய்வங்களை கொண்டாடும் திருவிழா நாட்களில் தேவைதானா?
கண்கள் காணும் காட்சிகளில், மாயையை போக்கும் குருவினை ஏற்றுக் கொள்ள வேண்டும். மாயையை போக்க முடியாதவர்களை குருவாக ஏற்றுக்கொண்டவர்கள், அவர்கள் காட்டும் மாயையில், அவர்களுடனே விழுந்து மறைந்து போகவேண்டியதுதான்.
குருட்டினை நீக்கும் குருவினைக் கொள்ளார்
குருட்டினை நீக்காக் குருவினைக் கொள்வர்
குருடும் குருடும் குருட்டாட்டம் ஆடிக்
குருடும் குருடும் குழி விழுமாறே.
- திருமந்திரம் 1680
இப்பேற்பட்ட குருவின் கருத்துக்களை எடுத்துக்கோளாக காட்டுவதனால், தனக்கு இயல்பாக இருக்கும் அறிவு நிலையும் போய்விடும். அரசியலுக்கு உன் நுண்ணறிவுதான் மூலதனம், அது அதிகம் செலவாகிவிடும், தேவையற்ற மிடுக்கான வாய் சவடால் பேச்சுக்களால்.
மூலதனம் அதிகம் செலவானால் என்னாகும் தெரியுமா?
ஆன முதலில் அதிகம் செலவானால்
மானம் அழிந்து மதிகெட்டுப் - போனதிசை
எல்லார்க்கும் கள்ளனாய் ஏழ்பிறப்பும் தீயனாய்
நல்லார்க்கும் பொல்லனாம் நாடு.
- நல்வழி 25
ஒளவைப்பாட்டியின் பேச்சுக்கு மறு பேச்சுண்டோ?
பூ விலை
சின்ன குடை போல் விரியும் இமையும்
விழியும் பார்த்தால் ஆசை விளையும்
'இந்து சனாதன தர்மத்தில் பெண்கள் அனைவருமே பூ விலை மகளிர் '
எழுதவே கூசும் வார்த்தைகளை, எப்படி இவர்களால் மேடைகளில் பேசி கைதட்டல் வாங்க முடிகிறது? - இப்படி ஒரு கூட்டம் தொடர்ந்து பேசிக்கொண்டே இருக்கிறது, தன்னைப் பெற்றவளும் பெண் என்பதை மறந்து.
எங்கோ பேசியதை, எதிர்க்கூட்டம் கட்டம் கட்டி எடுத்து தூபம் போட்டு மக்களிடையே பரப்புரை செய்து வன்மத்தை தூண்டுகிறது.
23-10-2020 இன்றைய சூடான தமிழக நிகழ்வு இது.
இரண்டு கூட்டமுமே ஒன்றை மறந்துவிட்டு இதனை அரசியலாக்கிக்கொண்டிருக்கிறது.
பரமஹம்சர் சிவானந்த ஸ்வாமிகளின் சித்த வேதம் என்ற புத்தகத்தில் சொல்வார்கள், 'ஒருவன் வடை, பாயசத்தோடு உண்ட இலையை வைத்து மற்றவர் அதன் சுவையை சொல்வது போல்தான்' நாம் படிக்கும் ஆன்மீக புத்தகங்கள்.
சனாதன தர்மத்தில் சொல்லப்பட்டு உள்ளதாலேயே, அந்த கருத்துகள், நிகழ் காலத்திற்கு ஏற்றதாகவும், தகுதி அற்றதாகவும் ஆகி விடாது.
உணவில் கல் இருந்தால் விலக்கி விட்டு உண்பது போல, நாம் நல்லதை மட்டும் நம் சிந்தனைக்கேற்ப எடுத்துக்கொண்டு மற்றதை விலக்கி வாழ கற்றுக்கொள்ள வேண்டும்.
பெண்மை என்பது மாபெரும் சக்தி.
ஒவ்வொரு அணுவுக்குள்ளும் உறையும் சக்தியே, நம் உடலில் ஒவ்வொரு சிற்றறைக்குள்ளும் உறைகின்றது. அந்த சக்தியை உணர்ந்து, உய்யும் வழியை மானிடம் அடையும் வழித்துணை அவர்கள் என்று திருமூலர் போன்ற தீர்க்கதரிசிகள் காட்டி சென்றுள்ளார்கள்.
உலகத்து உயிர்களை எல்லாம் தன்னுள்ளே கொண்டுள்ள அந்த ஆதி பராசக்தி உமையவள் என்னுள்ளும் கோவில் கொண்டுள்ளாள். பஞ்ச பூதங்களான நிலம்,
நீர் , நெருப்பு, காற்று, ஆகாயம் இவற்றில் உறையும் அதே சக்தி என்னுள்ளும் என் கண்களுக்குள்ளும் குடிகொண்டிருக்கிறாள்.
தன்னுளு மாகித் தரணி முழுதுங்கோண்(டு)
என்னுளு மாகி இடம்பெற நின்றவள்
மண்ணுளும் நீர்அனல் காலுளும் வான்உளும்
கண்ணுளும் மெய்யுளுங் காணலும் ஆமே.
- திருமந்திரம் 1354
கண்ணுக்குள்ளே வா வா.. நெஞ்சுக்குள்ளே போ போ.. என் ஜீவனே!
அர்த்தநாரி
பார்த்த இடத்திலெல்லாம்
உன்னைப்போல் பாவை
தெரியுதடி
'அர்த்தநாரி அல்லது மாதொருபாகன் என்றால்தான் என்ன?'
'ஹரத என்றால் பாதி. நாரி என்றால் பெண். இறைவன் பாதிப்பெண்ணானால் அர்த்தநாரி. மாதினை உடலின் ஒரு பாகமாக கொண்டால் மாதொருபாகன்.
'ஆண் பாதி, பெண் பாதியாக உள்ள ஓருடலாய் இறைவனை உருவகப்படுத்துவது சரியா?'
'எதனை எடுத்துரைக்க இந்த அவதாரம்?'
நம்முடைய உடலினை, அதன் ஆரம்பத்திலிருந்து பார்ப்போம்.
மனித உடலின் ஆதிக்கு செல்வோம். அங்கே ஆதியாய் ஆரம்பித்தது ஒரு செல், அதாவது ஒரு சிற்றறை. அந்த சிற்றறைக்குள் என்ன இருந்தது என்று பார்ப்போம், இப்போது.
ஓர்எழுத் தாலே உலகெங்கும் தானாகி
ஈர்எழுத் தாலே இசைந்துஅங்கு இருவராய்
'மூ'எழுத் தாலே முளைக்கின்ற சோதியை
மாஎழுத் தாலே மயக்கமே உற்றதே.
- திருமந்திரம் 885
ஓர் எழுத்து என்பது 'அ'காரம். சிவன் அகாரத்தால் உலகமுழுதும் [சிற்றறை] தானாகி, 'உ'காரத்தால் உடம்பினுள் [சிற்றறைக்குள்] கலந்து, மூவெழுத்தாகிய 'ம'காரத்தால் சக்தியுடன் [சிற்றறைக்கு சக்தி] இணைந்து, ஒளிப்பிழம்பாகவும், நாத மயமாகவும் விளங்குகிறான்.
அகாரம் + உகாரம் + மகாரம் = ஓம்
பிரணவ மந்திரம், 'ஓம்', நம் உடலில் பிரபஞ்ச நாதம் ஒலித்துக்கொண்டே இருக்கிறது. அர்த்தநாரி அல்லது மாதொருபாகன்.
முதல் சிற்றறை தொடங்கி, அதன் அம்சமாக கோடி கோடியான சிற்றறைகளாக, நம் உடல் இப்போது.
'பார்க்கும் இடமெல்லாம் பாவை தெரிவது இதனால்தான்'
அறிவியலும் இந்த சிற்றறை சித்தாந்தத்தில் அடங்கி போவதையும் பார்ப்போம்:
ஒரு காலத்தில், இதற்குமேல் பிரிக்க முடியாத சிறிய பகுதியாக அறியப்பட்டது அணுத்துகள். அதனை, பிரித்து பார்த்தபோது கிடைத்தது, மூன்று பொருள்கள்.
1. நியூட்ரான் 2. புரோட்டான் 3. எலக்ட்ரான்
நியூட்ரானும், புரோட்டானும் கரு மையமாக நின்றிருக்க, எலெக்ட்ரான் கரு மையத்தை சுற்றிவரும்.
புரோட்டானில் உள்ள நேர்மறை சக்தி எண்ணிக்கைக்கு சமமான எதிர்மறை சக்தி எண்ணிக்கை எலெக்ட்ரானில் இருக்கும்.
அதாவது,
நீ பாதி - நான் பாதி கண்ணே!
கண்ணழகு
பறவைகளில் அவள் மணிப்புறா
பாடல்களில் அவள் தாலாட்டு
கனிகளிலே அவள் மாங்கனி
காற்றினிலே அவள் தென்றல்
அகத்தின் அழகு முகத்தில் தெரியும்
முகத்தின் அழகு கண்களில் தெரியும்
கண்களின் அழகு விழிகளில் தெரியும்
விழிகளில் அழகு உயிராய் தெரியும்.
'அவள் கவிஞனாக்கினாள் என்னை'
மலரின் நறுமணம் தன்னை காட்டி நிற்கும். செய்யும் செயலே உண்மையை அறியச் செய்துவிடும். உள்ளத்தில் பொதிந்த எண்ணத்தை மனம் சொல்லுமுன்னர் முகமே சொல்லிவிடும்.
நாற்ற முரைக்கும் மலருண்மை கூறிய
மாற்ற முரைக்கும் வினைநலந் தூக்கின்
அகம்பொதிந்த தீமை மனமுரைக்கும் முன்னம்
முகம்போல முன்னுரைப்ப தில்.
இரண்டு மூன்று நான்கு
ஓசு சோத்துல உடம்ப வளத்துட்டே(ன்)
மீசை இருப்பத மறந்து இருந்துட்டே(ன்)
2021 சட்ட மன்ற தேர்தலுக்கு முதல்வர் வேட்பாளர். அதிமுக அதிகாரபூர்வ அறிவிப்பு!
'அதெப்படி நம்மள கேக்காம அவங்க பிரியாணி செய்யலாம். பக்கத்து வீட்டுக்காரங்கற மரியாதை கொஞ்சம் கூட இல்லாம. நாங்க இத ஒத்துக்க மாட்டோம். எதுத்த வீட்டுக்காரன்கிட்ட போயிருவோம்' - பாஜக முன்னாள் மத்திய மந்திரி.
அடுத்த நாளே அதே வாய், 'அவங்க வீட்டு பிரியாணி எப்பவுமே சூப்பர்'.
'எங்க தோட்டத்துலயே அறுபது ஆடு தேறும். தெரியுமில்ல? அவங்க பிரியாணி செய்யிறதா ஒத்துக்க மாட்டோம்' - பாஜக மாநில தலைவர்.
'என்னமோ போங்க. உங்க வீட்டு பிரியாணி மவுசே தனிதான்' - வாழ்த்தி வழிந்ததும் இதே தலைதான்.
'ஏற்கனவே எதுத்த வீட்டுக்காரன்கூட சேந்து பிரியாணி செஞ்ச வரலாறு இருக்கு. இந்த பிரியாணியை சரின்னு எங்க பாஸ் சொன்னாதான் சாப்பிடுவோம்' - பாஜக மாநில துணை தலைவர்.
'இவங்களுக்கு நாங்க எந்நாளும் கதவை திறக்க மாட்டோம்' - எதுத்த வீட்டு அறிவிப்பு பலகை.
'பிரியாணி முழுக்க நாங்களே வச்சுக்குவோம்' - அதிமுக மந்திரி.
'அதிமுக தனித்து போட்டியிடும். இணைந்து போட்டியிடும் ஒன்றிரண்டு கட்சிகளும் இரட்டை இலை சின்னத்தில் போட்டி இடுவார்கள்.' - 2016 சட்ட மன்ற தேர்தல் நிலை அது.
அப்பொழுதும் ஓசு சோத்துக்கு ஓலமிடும், இரண்டு தேசிய கட்சிகளும் முட்டி மோதித்தான் பார்த்தார்கள்.
இன்றைய சூழலில், தமிழனுக்கு கண்ணுக்கு தெரியும் எதிரிகள், இவர்கள் இருவரும்தான்.
2021 சட்ட மன்ற தேர்தலில், 234 தொகுதிகளிலும், இரட்டை இலை, உதய சூரியன் மட்டுமே போட்டி என்ற நிலை எடுக்க வேண்டும். இவ்விரு பிரதான எதிர் கட்சிகள், தமிழகத்தின் நலன் கருதி ஒன்றிணையலாம். ஒன்றிணைய வேண்டும்.
அந்த நாள்..
எங்களுக்கும் காலம் வரும்
காலம் வந்தால் வாழ்வு வரும்
வாழ்வு வந்தால் அனைவரையும்
வாழ வைப்போமே!
ஏன் இவ்வளவு கோபம் வருகிறது?
மத்திய அரசின் தொல்லியல் துறையில் முதுகலை பட்டத்திற்கு, தமிழ் மொழியை சேர்க்க போராடி பெற வேண்டும்.
மாநிலங்களுக்கு உரிய G S T நிலுவைத்தொகை மறுப்பு.
செய்வீர்களா? செய்வீர்களா?
நாட்டுக்கு நாயகன் நம்ஊர்த் தலைமகன்
காட்டுச் சிவிகை ஒன்று ஏறிக் கடைமுறை
நாட்டார்கள் பின் செல்ல முன்னே பறைகொட்ட
நாட்டுக்கு நம்பி நடக்கின்ற வாறே.
- திருமந்திரம் 153
இப்பாட்டில், தலைமகன் செல்லும் ஊர் சுடுகாடு; இரண்டு தேசிய கட்சிகளும் செல்ல வேண்டிய ஊர்.
2021 தேர்தலில் வச்சு செய்யுங்கள்!
'
பாலும், தேனும், அமுதமும்
பக்கத்தில் பழம் இருக்க
பாலோடு தேனிருக்க
மாத்தாடு மாத்தாடு மல்லிகே..
'தேனொடு, பால் தரும் செவ்விளநீர்களை
ஓரிரு வாழைகள் தாங்கும்' - அது என்ன?
'தெரியலையா?'
மாத்தாடு மாத்தாடு மல்லிகே..
கபிலர் ஆரிய அரசன் பிரகத்தனைத் தமிழ் (தமிழ்ப்பண்பு) அறிவித்தற்குப் பாடியது – என்று கூறப்படுகிறது
காதலர் தாமே கூடிப் பின் மணந்துகொள்ளும் தமிழ்நெறியை ஆரிய அரசன் பிரகத்தன் உணராமல் ஏதோ பேசினான்.
அவனுக்குத் தமிழ்நெறி இத்தகையது என்று காட்டுவதற்காகக் கபிலர் இந்தக் குறிஞ்சிப்பாட்டைப் பாடினார். குறிஞ்சி நிலத்தெய்வம் முருகன், வள்ளி கதையாக பின்னர் அறியப்படுகிறது.
பண்பு கெடாமல் நிகழ்ந்த தற்செயல் இயல்புப் புணர்ச்சியை இப்பாடலில் காணலாம்.
நாணும் உட்கும் நண்ணுவழி அடைதர,
ஒய்யெனப் பிரியவும் விடாஅன், சுவைஇ
ஆகம் அடைய முயங்கலின், அவ் வழி,
பழு மிளகு உக்க பாறை நெடுஞ் சுனை,
முழு முதற் தீம் கனி உதிர்ந்தென.....
- குறிஞ்சிப்பாட்டு
நாணமும், அச்சமும் கொண்டு தோழி நான் பிரிந்து விட்டேன், அவர்களை தனித்திருக்க விட்டு விட்டு.
'ஒய்' என்று தலைவி நெஞ்சை தலைவன் தன் நெஞ்சில் அணைத்து தழுவிக்கொண்டான். பிரிய முயன்ற அவளை விடவில்லை அவன். மயிலாடும் பாறையில் இருந்த பழுத்த மிளகின் உள்ளிருந்த சுனையில் பலாப்பழத்தேன் ஒழுகியது. அதில் முழு மாம்பழம் விழுந்தது.
'இன்னும் விளங்கலையா?'
மும்மலங்கள் கோயிலைக்கட்டியவன் மனிதன் சிலைதனை வடித்தவன் மனிதன் உண்டியலை வைத்ததும் மனிதன் பூட்டினைப் போட்டதும் மனிதன் - சேருகின்ற காசுக்...