Thursday, April 11, 2019

தாய் மொழி

தாய் மொழி 

அறிந்திருந்ததால்
அவனுக்கும்
தாய் மொழி
தமிழ்

பொருள்:
அமிழ்தம் மூன்று நிலைகளில், அறிகிறோம்:

1.  பாற்கடலில் திரண்டது
2.  வானின்று பொழிவது
3.  தமிழென்று வாழ்வது

தமிழுக்கும் அமுதென்று பேர் - அந்தத்
தமிழ் இன்பத்தமிழ் எங்கள் உயிருக்கு நேர்
                                                           -பாரதி தாசன் 

Tuesday, April 9, 2019

உடல்

உடல்


இன்னுடல்
மறுப்போரும்
மறப்போரும்
பொன்னுடல்
பெற்றோரே

பொருள்:
ஐம்புலன்களால் இன்னலைத் தரத்தக்க உடலின்பம்
மறுத்து, உயிரையே நேசித்து, இறை நிலை தேடுவர் முனிவர்கள்.

ஐம்புலன்களால் இன்பத்தைத்  தரத்தக்க உடலை மறந்து, இல்லறத்தை
நேசித்து, நல்லறம் இயற்றும் மனிதர்கள்.

இவர்கள் பொன்னொளிர் மேனி பெற்று, இறைநிலை உணர்வுடன் நல்லறம் போற்றி, பூவுலகில் வாழ்வாங்கு வாழ்வர்.


தானே புலன்ஐந்துந் தன்வசம் ஆயிடும்
தானே புலன்ஐந்துந் தன்வசம் போயிடும்
தானே புலன்ஐந்துந் தன்னில் மடைமாறும்
தானே தனித்துஎம் பிரான்தனைச் சந்தித்தே. 
                                  -திருமந்திரம் 


 
  

Sunday, April 7, 2019

காமம்

காமம் 

வாழ்வின்
பொருளென்ன...
நீ வந்த
கதையென்ன...

பொருள்:
உடலில் உள்ள உயிரையும், சக்தியையும் இணைக்கும் பாலமெது?
ஐம்புலன்கள் தன்னிலை நிறைவெய்தி உயிரை ஆரோக்கியம் பெற செய்கிறது. உணவும், சுற்றுப்புற சூழலும் சக்தியை வழங்குகிறது.

அன்பு, பாசம்,காதல் என்றொரு பக்கமாகவும், பேராசை, பொறாமை,
கோபம் என மறுபக்கமாகவும் காமம் உயிரையும், சக்தியையும் இணைக்கும் பாலமாக அமைகிறது.

'ஆமப்பா சிவயோகம் செய்வதற்கு
அப்பனே அகாரமுடனுகாரஞ் சொன்னேன்
தாமப்பா மகாரமென்ற வாலை தன்னை
தாரணியில் ஆறறிவார் சங்கை மார்க்கம்
காமப்பால் கொண்ட சிவ கெங்கையான
கன்னி மனோன்மணியின் நாதமென்றும்
நாமப்பா சொல்லுகிறோம் செந்தேனென்றும்
நாதாந்த நாதமென்றும காரமாமே'
                                                                      - அகத்தியர்

அகாரம்+உகாரம்+மகாரம்=ஓம்
உயிர்+சக்தி+காமம்=ஓம்

இதுவே அணுவின் நிலையும்கூட..

அணுவின் கருவில் உள்ள புரோட்டானின் [+]
எண்ணிக்கைக்கு ஈடாக அதனை சுற்றி வரும்
எலெக்ட்ரானின் [-] எண்ணிக்கை இருக்கும்,
உயிரும் சக்தியும் போன்று. ஒன்றை ஒன்று 
ஆகர்ஷித்து, அணுவாகி மூலக்கூறாய்,
பேரண்டமாய்  அமைகிறது.

Iron --> Fe -->Proton [+26] -->Electron [-26]
Gold -->Au -->Proton [+79] -->Electron [-79]






Friday, April 5, 2019

பற்று

பற்று 

பற்றியிருப்போரும்
பற்றற்றிருப்போரும்
பற்றியொளிர்வது
பரஞ்சோதியில்

பொருள்:
இறைநிலை தேடி அதில்தான் வாழ்வேன் என்று, காடு, மலைகள் சுற்றி, குகைகளில் பற்று வைத்து வாழ்வோரும், இறைநிலை பற்றிய உணர்வும் பற்றும்  இல்லாமல் இல்லற வாழ்வில் நிலைத்திருப்போரும்  அந்த ஆனந்த ஜோதியில் இருந்து வந்து  ஒளிர்பவர்கள்தான்.

உலக வாழ்வே பெரிதென, பொருள் தேடி இல்லற வாழ்வில் பற்றி இருப்போரும், உலகே மாயமென பற்றற்று இல்லற வாழ்வை  துறந்தோரும் அந்த பரமானந்த ஜோதியில் இருந்து வந்து ஒளிர்பவர்கள்தான்.

பஞ்சபூதங்களையும் அணுவினில் அடக்கி, அணுவினுக்கு அதிபதியாய் விளங்கும் அந்த பரஞ்சோதிதான் நம் உயிரணு என்ற உணர்வில் ஒளிர்வோம்.






Thursday, April 4, 2019

தனிமை

தனிமை 

உயிரிருந்தால்
உணர்விருக்கும்
தனிமையில்லை

பொருள்:

பல கோடி பேர் கலந்துகொண்ட ஓட்டப்பந்தயத்தில், முதன்மை பெற்றுவந்ததிந்த உடல். ஐம்புலன்களும் சிறப்பாக செயல்படும் நிலையில் எடுத்த காரியத்தை வெல்லும் ஆற்றல் உடலுக்கு உண்டு.

உடலைக்கொண்டே இப்பூவுலகில் நமக்கிடப்பட்ட கடமையை செய்ய வேண்டிய கட்டாயம் இருப்பதால், ஐம்புலன்களை ஆரோக்கியமான நிலையில் வைப்பது அத்தியாவசியமாகிறது.

உடலின் ஆதாரத்தில்தான் உயிரின் உணர்வு நிலை வெளிப்படுகிறது. எனவே, உடலை பேணி ஆரோக்கியமாக வைப்பது நம் அடிப்படை தேவையாகிறது.


உடம்பார் அழியில் உயிரார் அழிவர்
திடம்பட மெய்ஞ்ஞானஞ் சேரவு மாட்டார்
உடம்பை வளர்க்கும் உபாயம் அறிந்தே
உடம்பை வளர்த்தேன் உயிர்வளர்த் தேனே

உடம்பினை முன்னம் இழுக்கென் றிருந்தேன்
உடம்பினுக் குள்ளே யுறுபொருள் கண்டேன்
உடம்புளே உத்தமன் கோயில்கொண் டான் என்று
உடம்பினை யானிருந் தோம்புகின் றேனே          
-திருமந்திரம் 



Wednesday, April 3, 2019

சிலை

சிலை 

சிறுபிள்ளை
சிந்தனை
சிலைதனையே
சிந்தித்திருப்பது

பொருள்:
அருட்பெருஞ்ஜோதியான ஆதி பகவான் எங்கும், எதிலும் நீக்கமற நிறைந்துள்ளான். அவன் இருக்குமிடமில்லை; இல்லாத இடமுமில்லை.

சிலைதனில்  உயிர்கொடுத்து, தீபமேற்றி, ஆராதனை காட்டி வணங்குகின்றோம், நாமே தீபத்தில் ஒளியாய் அந்த அருட்பெருஞ்ஜோதியுடன் சங்கமிக்கிறோம் என்ற உணர்வு இல்லாமல்.

உணர்வு நிலையே உயிர் நிலை.

Tuesday, April 2, 2019

பூ மலரட்டும்

பூ மலரட்டும் 

தொட்டால் 
பூ 
மலரும் 

பொருள்:

நாம் சுவாசிக்கும், சுவாசக்காற்று முதலில் உடலின் வெப்பத்திற்கு சமனப்படுகிறது. மின்னல் வேகத்தில், காற்று வந்த செய்தி மூளைக்கு செய்தியாகிறது. ஒளி ஆற்றல் பெற்ற செய்தி ஆறாதாரங்களின் வழியாக ஜீவசக்திக்கு சென்றடைவதே 'உணர்வு'.

சுவாசம் (காற்று) --> வெப்பம் --> ஒளி --> மூளை --> ஆறாதாரம் --> உணர்வு 

அனைத்தும் சமகாலத்தில் அனிச்சையாக நடந்துகொண்டே உள்ளது, உடலில் உயிர் உள்ளவரை.

காற்று        தொட்டால் 
உணர்வு     பூ 
ஜீவனில்     மலரும் 

அறியும் அல்ல அயனும் அல்ல அப்புறத்தில் அப்புறம் 
கருமை செம்மை வெண்மையைக் கடந்து நின்ற காரணம் 
                                                                                           -சிவ வாக்கியர் 

உணர்வாகின்ற ஞாபகம் எவ்விடமிருந்து உண்டாகிறதென்றால் பிரகாசத்திலிருந்தேதான். பிரகாசம் அக்கினியிலிருந்துண்டாகிறது. அக்கினி உண்டாகிறது வாயுவிலிருந்து. அப்பொழுது வாயுவாகி, அக்கினியாகி, பிரகாசமாகி, அறிவாயிருக்கின்ற ஜீவசக்தி தன்னிலே அடங்கும்பொழுதுதான் நமக்கு உணர்வு உண்டாகிறது.
                                                                                                   -சித்த வேதம் 

கல்லிலே கலைவண்ணம்

கல்லிலே கலைவண்ணம்     எனக்கு தீப ஆராதனை.  இவ்வளவு நேரம் என் மேனியெல்லாம் அபிஷேகம். பால், தேன், பஞ்சாமிர்தம் என வெவ்வேறு உணவு, வாசனை திரவியங்...